………. ……………. …………….. உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,
அன்னதோர் இல்லியி னூடுபோய், – வீடென்னும் (2719)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, – அதுநிற்க, (2720)
பதவுரை
|
உனது என்னில் |
– |
(அடியோடு இல்லை யென்று நான் சொல்லுகிற அந்த மோக்ஷம்) உண்டு என்கிற பக்ஷத்தில், |
|
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் |
– |
நிபிடமாயும் திக்ஷ்ணமாயுமுள்ள கிரணங்களை யுடையனான ஸூர்யனுடைய மண்டலத் தின் நட்ட நடுவே |
|
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் |
– |
வாய்கொண்டு சொல்ல முடியாத அப்படிப்பட்ட ஸூக்ஷ்மமான ரந்த்ரத்தின் வழியே சென்று |
|
வீடு என்னும் தொல்நெறி கண் சென்றாரை சொல்லுமின்கள் |
– |
மோக்ஷ மென்று நீங்கள் சொல்லுகிற ஒரு ஸ்தாநத்திற்குப் போய்த் திரும்பி வந்தவர்களைக் காட்டுங்கள். |
|
சொல்லாதே |
– |
அப்படிப்பட்டவர்களைக் காட்டமாட்டாமல் |
|
அன்னதே பேசும் |
– |
(மோக்ஷமுண்டென்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறதென்று) பழம்பாட்டையே பாடிகக்கொண்டிருக்கிற |
|
அறிவு இல் சிறுமனத்து அன்னவரை |
– |
விவேகமற்றவர்களும் சிறிய மனமுடையவர்களுமான அவர்களுக்கு |
|
கற்பிப்போம் யாமே |
– |
நாமோ தெளிவைப் பிறப்பிக்க வல்லோம், (அந்த அவிவேகிகளுக்கு நம்மால் தெளிவு பிறப்பிக்க வொண்ணாது) |
|
அது நிற்க |
– |
அந்த மோக்ஷ வார்த்தை அப்படி கிடக்கட்டும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஏன் கேட்டதில்லை? ************* வாமதேவோ முக்த என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றனவே, சுகன் வாமதேவன் முதலானோர் மோக்ஷமடைந்தார்களென்று சொல்லக் கேட்கவில்லையோ என்ன, அப்படி சொல்லியிருப்பது போராது, ஒரு மனிதன் என் கண்ணெதிரே வந்து நின்று நான் ஸூர்ய மண்டலத்தைப் பிளந்துகொண் அதன் வழியே சென்று மோக்ஷம் போய்ச்சேர்ந்து கண்டு வந்தேன்“ என்று அங்குப் போய்வந்தார் சொல்லக் கேட்கவேணும், அப்படி ஒரு வருஞ் சொல்லக் கேட்டதில்லையே என்கிறார்.
“வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை“ என்றவிடத்து சென்றாரை என்பதற்கு ‘சென்று என்பதற்கு ‘சென்று திரும்பி வந்தவர்களை‘ என்று பொருள் கொள்ளல் வேண்டும். அறிவு இல் சிறுமனத்து மோக்ஷமுண்டென்று சொல்லுகிறவர்களுக்கு விவேகமில்லை, இனி விவேகமுண்டாகலாமென்னவுங் கூடாதபடி நெஞ்சுங்குறுகியது என்கிறார்.
கற்பிப்போம் யாமே –இல்லாத்தொன்றை உண்டென்று சில அவிவேகிகள் சொன்னால் அவர்களோடு வாக்யார்த்தம் சொல்வதுதானா எனக்குக் காரியம், நான் பிடித்த புருஷார்த்தத்தை இனிதாகப்பேசுவது தவிர்த்து அந்த அறிவிலிகளோடு வாதப்பதிவாதம் பண்ணுவது எனக்கு வேலையன்று. அவர்கள் மனம் போனபடி ஏதேனும் சொல்லிக்கொண்டிருக்கட்டும் என்று கையொழிகிறார். “ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடந்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே“ எனற நம்மாழ்வாரை ஒரு புடை ஒப்பர் இவர்.
