(2704)-(2705)

………….               ……………… அதுனிற்க

ஆரானு மாதானும் அல்லலவள் காணீர்

வாரார் வனமுலை வாசமததை வென்று

ஆரானும் சொல்லப்படுவாள் – அவளும்தன்           (2704)

பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ

தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள்

ஊராரிகழ்ண்திடப் பட்டாளே, மற்றெனக்கிங்கு               (2705)

ஆரானும் கற்பிப்பார் நாயகரே —

பதவுரை

வார் ஆர் வனம் முலை வாச வதத்தை என்று

கச்சணிந்த அழகிய முலையையுடைய வாசவதத்தை யென்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவள்

எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டவளானவள்
ஆரானும் ஆதானும் அல்லள் காணீர்

ஸாமாந்யமான ஒருத்தி யல்லள் (மிகவும் பிரஸித்தை யாயிருப்பவள்)
அவளும்

அந்த வாஸவதத்தை தானும்
தன் பேர் ஆயம் எல்லாம் ஒழிய

தனது சிறந்த தோழிகளை யெல்லாம் விட்டிட்டு
பெருதெருவே

பெரிய தெருவழியே
தார் ஆர் தட தோள் தளை காலன் பின் போனாள்

மாலை யணிந்த பெரிய தோள்களை யடையவனும் விலங்கிடப்பெற்ற கால்களையடைனுமான வத்ஸராஜ னென்பவன் பின்னேபுறப்பட்டுப் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டானே

(அவள்) ஊராராலே நிந்திக்கப்பட்டாளோ? (இல்லை)
இங்கு

இப்படிப்பட்ட எனது அவஸ்தையிலே
எனக்கு

பதற்றமுடைய எனக்கு
மற்று கற்பிப்பார்

எனது துணிவுக்கு எதிர்த்த தட்டான பொறுமையை உபதேசிப்பவர்கள்
ஆரானும்

ஆராயிருந்தாலும்
நாயகரே

அவர்கள் எனக்கு நியாமகராவரோ? (அவர்கள் பேச்சை நான் பேணமாட்டேன்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இருந்தவிடத்திலுக்கமாட்டாமல் நாயகன் பின்னே பதறி ஓடுவது என்னுடைய புதிய வழக்கமல்ல, இதற்கு சிஷ்டாசாரமுமுண்டென்று காட்ட முயன்ற பரகாலநாயகி, வாஸவதத்தை யென்று ப்ரஸித்தையான ஒரு புராதன ஸ்த்ரீயின் நடத்தையை எடுத்துக் காட்டுகின்றாள்.

“வாரார்வனமுலை வாசவதத்தை யென்று ஆரானு மாதானு மல்லள் காணீர்“ ஸாமாந்யமான ஒரு ஸ்த்ரீயாகில் அவளுடைய நடத்தை நமக்கு ப்ரமாணமோ? என்று கழித்துவிடலாம், வாஸவதத்தை அப்படிப்பட்டவல்லள், விவேகத்திற் சிறந்தவள், கற்பில் பெருத்தவள், அனைவராலும் புகழப்பட்டவள், அன்னவளது நடத்தை நமக்குப் பரமப்ரமாணமன்றோ வென்கிறாள்.

(அவளுந்தன் பேராமெல்லாமொழிப் பெருந்தெருவே, தாரார் தடந்தோள் துளைக்கலான் பின்போனாள்) ஸுபந்து என்னுமொரு மஹாகவியால் இயற்றப்பட்ட வாஸவதத்தா என்று ப்ரஸித்தமான ஸ்ம்ஸ்க்ருத ஆக்கயாயிகாப்ரபந்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட வாஸவதத்தை யென்ற கதாநாயகிதான் இங்கு ஆழ்வாரால் உதாஹரிக்கப்பட்டவளென்று பலர் ப்ரமித்திருக்கின்றனர். அந்த வாஸவதத்தை கவினால் கல்பித்துக் கொள்ளப்பட்டவளேயன்றி ஒரு புராண நாயகியல்லள், காதம்பரீ, மாலதீ வஸந்தா என்று சில வயக்திகளைக் கவிகள் தாமே கல்பித்துக்கொண்டு நாவல்போன்ற க்ரந்தங்களை எழுதினாற்போல் ஸுபந்துகவியும் வாஸவதத்தை யென்ற பெயரால் ஒரு வயக்தியைக் கல்பித்துக்கொண்டு தனது புத்தி சமத்காரத்தால் ஒரு கதை எழுதிவைத்தான். அர்வாசீநமாகிய அந்த நூலில் வருணிக்கப் பட்ட வாஸவதத்த இத்திருமடலில் உதாஹரிக்கப்பட்டவளல்லன. அந்த வாஸவதத்தையின் கதையே வேறு. அவள் ஒரு சாபவிசேஷத்தால் கல்லுருவடைந்த்தாகவும் தனது காதலனாகிய கந்தர்ப்பகேதுவின் கரஸ்பர்சத்தாலே சாபம்நீங்கிப் பெண்ணுருவம் பெற்று அக்காதலனைக் கூடி மகிழ்ந்ததாகவும் அதிற் சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஆழ்வார் எடுத்துக்காட்டும் வாஸவதத்தையின் சரிதை அங்ஙன்ன்று, காதலனும் அப்பெயருடையனல்லன். “தோழிமாருடைய பெரிய திரளைக் கடுகவிட்டு, விலங்கிட்டிருக்கிற வத்ஸராஜன் பின்னே போனாள்“ என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ளமையால்‘ இவளது காதலனுடைய பெயர் வத்ஸராஜனென்றும் இவளது வரலாறே வேறு வகையானதென்றும் நன்று விளங்கக்குறையில்லை. இவளுடைய சரித்திரம் ஏதோ ஒரு புராணத்தில் கூறப்பட்டிருக்கவேணும். ஸ்ரீ மஹாபாரதம் முதலிய சில புராண இதிஹாஸங்களை ஆராய்ந்து பார்த்ததில் அடியேனுடைய சிற்றறிவிற்கு இவளுடைய வரலாறு எட்டவில்லை. இவளது கணவனான வத்ஸராஜனுடைய பெயர் மாத்திரம் மஹாபாரதத்தில் ஒரு மூலையில் படிக்கப்பட்டுள்ளது. எங்கேயெனில் ஆதிபர்வத்தில் த்ரௌபதியில் ஸ்வயம்வரத்திற்காகத் திரண்ட அரசர்களின் பெயர்களைச் சொல்லிவரும் ப்ரகாணத்தில், இருநூற்றோமத்யாயத்தில் இருபத்திரண்டாம் ச்லோகத்தில். அந்தவத்ஸராஜன் இங்கு “தாரார் தடந்தோள் களைக்காலன்“ என்று ப்ரதிபாதிக்கப்பட்டானாகப்கொள்க. இந்த வரலாறு விரிவாக வந்தவிடத்தே கண்டுகொள்க. துரும்பதவுரைகாரரொருவர் – வாஸவதத்தையான ராஜபுத்ரி வத்ஸராஜனென்பர் னாடே ஸங்கதையாக அவனை ராஜா சிறையிலே வைக்க, அவனையுங் கட்டிக்கொண்டு அவன் பின்னே போனாளென்கிற கதை“ என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோமித்தனை. ஆனால் “கதாஸரித்ஸாகரம்“ என்கிற வடமொழிப் புத்தகமொன்றில் பன்னிரண்டாவது தரங்கத்தில் இந்த வரஸவதத்தையின் சரித்திரம் இவ்விடத்திற்குச் சிறிது பொருத்தமாக மிகவும் விரிவா யெழுதப்பட்டுள்ளது. கண்டு கொள்க. அப்புத்தகத்திற்கு எந்தப் புராணம் மூலமென்று ஆராயவேண்டும்.

வாஸவத்தை யென்பவள் துணிந்து நாயகன் பின்னே பதறிச் செல்லவில்லையா? அவனை யார் ஒதுக்கிவிட்டார்கள்? அவளைப்போலே நானும் தெருவேறப் புறப்படத்தான் போகிறனெனற கருத்தாக உரைத்த பரகாலநாயகியை நோக்கிச் சில பெரியோர் ‘அம்மா‘ இப்படி நீ சொல்வது தகுதியன்று, ஸவரூபஜ்ஞாநமுடையார் இப்படி சொல்லத் தகாது என்றாற்போலே சில விரைக்க, அவர்களைத் தூக்கி யெறிந்து பேசுகிறாள் – மற்றெனக்கிங்காரானுங் கற்பிப்பார் நாயகரே? என்கிறாள். என்னுடைய துணிவுக்கு எதிர்த்தட்டாக வார்த்தை சொல்லி என்னை சிக்ஷிப்பவர்கள் எனக்கு நியாமகரல்லர், அவர்கள் பேச்சை நான் செவியேற்கவேண்டியதே அநாவச்யகம் என்றாளாயிற்று.

பின்னை நீ செய்ய நினைத்திருக்கிற காரியம் என்னவென்று கேட்டார்க்குத் தன உறுதியை வெளிப்படையாக விளம்புகின்றாள்மேல்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top