(2697)-(2698)

நானவனைக் காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா

பேராபிதற்றத் திரிதருவன், பின்னையும்                    (2697)

 

ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை

சோராமருக்கும் வகையரியேன், சூழ் குழலார்          (2698)

 

ஆரானுமேசுவர் என்னு மதன்பழியெ

வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன்

 

பதவுரை

நான்

நானோவென்றால்

அவனை கார் ஆர் திருமேனி காண்டதுவே காரணம் ஆ

அவனது கரிய திருமேனியை ஸேவித்தது முதலாக

பேரா பிதற்றாதரிதருவன்

உருமாறி வாய் வெருவிக் கொண்டு திரியாநின்றேன்,

பின்னையும்

அதற்குமேல்,

தண் வாடை

குளிர்ந்த காற்றானது

இ உடலை ஈரா புகுதலும்

(எனது) இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு உள்ளேபுகுந்து

சோரா மறுக்கும்

தளர்த்தியை யுண்டாக்கித் துன்பப்படுத்துகின்றது

வகை அறியேன்

ஹிம்ஸிக்கும் ப்ரகாரங்களையும் பகுத்துச் சொல்ல அறிநின்றிலேன்,

சூழ் குழலார் ஆரானும்

நிறைந்த கூந்தலையுடைய பெண்கள் யாராகிலும்

ஏசுவர் என்னும் அதன் பழியை

அலர் தூற்ற, அத்தால் வரும் அபவாதத்தை

வாராமல் காப்பதற்கு

தடுத்துக் கொள்வதற்காகவே

வாளா இருந்தொழிந்தேன்

(இதுவரை) ஒன்றும் செய்யாமலிருந்துவிட்டேன்,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எனது தாய் மாத்திரம் கவலையற்றுக் கையொழிந்தாளே யொழிய, நான் கவலை தீரப்பெற்றிலேன், என் துக்கம் தொலையப் பெற்றிலேன் என்கிறாள் பரகால நாயகி. ஸகல தாபங்களையும் தணிக்குமதான அவனுடைய திவ்ய திருமேனியை அன்றொருநாள் நான் காணப்பெற்றது முதலாக, நிலைகுலைந்து வாய் வந்தபடி கண்டவா பிதற்றிக்கொண்டு திரிபவளாயினேன். கள் குடித்த குரங்குக்குத் தேள்கடியும் நேர்ந்தாற்போலே குளிர்ந்த வாடைக் காற்றும் பாவியேனுடலை அறுத்துக்கொண்டே உள்ளே புகுந்து துன்பப்படுத்தாநின்றது, சித்ரவதை பண்ணாநின்றது, அது செய்கிறவகைகள் லாசாமகோசரம்.

அன்றைக்கே நான் மடலூரப் புறப்பட்டிருக்கவேண்டும், ஸஜாதீயைகளான ஸ்த்ரீகள் யாராவது நிறக்கேடான வார்த்தைகளைச் சொல்லி நம்மை ஏசுவார்களே என்று லோகாபவாதத்துக்கு அஞ்சி இதுவரையில் மடலூராதே வீணே காலங் கழித்தேன்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top