நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை
கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
ஈரா விடுத்தவட்கு ழத்தூனை வென்னரகம் (2689)
சேரா வகையெ சிலைகுனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையால் வைதேவி காரணமா
ஏரார்த்தடந்த்தோ ளிராவணனை ஈரைந்து (2690)
பதவுரை
|
தன் சீதைக்கு நேர் ஆவன் என்று |
– |
தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து |
|
ஓர் நிசாசரி வந்தாளை |
– |
(என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை |
|
கூர் ஆர்ந்த வாளால் |
– |
கூர்மை பொருந்திய கத்தியினால் |
|
கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து |
– |
கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு, |
|
அவட்கு மூத்தோனை |
– |
அவளுடைய தமையனான கரனை |
|
வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் |
– |
‘இனி இவன் வேறொரு கொடிய நரகம் போய் வேதனையநுபவிக்க வேண்டியதில்லை‘ யென்னும் படியாக ஸகல நரக வேதனைகளையும் போர்க்களத்திலே அவனுக்குதந்து வில்லை வளைத்துக்கொன்றொழித்தவன் |
|
செம்துவர் வாய் |
– |
மிகவும் சிவந்த அதரத்தை யுடையவளும் |
|
வார் ஆர்வணம் முலையாள் |
– |
கச்சு அணிந்த அழகிய முலையையுடையவளுமான |
|
வைதேவி காரணம் ஆ |
– |
ஸீதாபிராட்டிக்காக |
|
ஏர் ஆர் தட தோள் இராவணனை |
– |
அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை |
|
சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று |
– |
சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று |
|
உகந்த |
– |
(முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த |
|
செம் கண் மால் |
– |
புண்டரீகாக்ஷன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான்“ என்ன விதற்கு ஸாமாந்யமாய்ப் பலரும் பொருள் சொல்லக்கூடும் – கரனை நரகத்துக்குப் போக வொட்டாமல் வீர ஸ்வரக்கத்துக்குப் போகச் செய்தார் பெருமாள் – என்று. இப்பொருளை மறந்து விடுங்கள். இங்ஙனல்ல பொருள். களைந்த வில்லுங் கையுமாய் நின்ற பெருமானை கண்ட கரன் “நாம் மேலேபோய் வேறொருநரகயாதனை அநுபவிக்கவேண்டா, எல்லா நரக வேதனையும் நமக்கு இங்கே அநுபவித்தாயிற்று‘ என்று பட்டர் அருளிச்செய்யுபொருள். நஞ்சியர் பட்டரை ஆச்சரியப்பதற்று முன்னே மேல் நாட்டில் வாழுங்காலத்து பட்டருடைய சிஷ்யரொருவரை ஸந்தித்து வார்த்தையாடும்போது ‘எங்களுடைய திவ்ய ப்ரபந்தத்திலே அவட்கு மூத்தோனை வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான் என்றிருக்கிறது, இதற்கு ஸாமந்யமாக நெஞ்சிற்பட்ட பொருளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பட்டர் எங்ஙனே சொல்லுவர்? என்று கேட்க, இங்ஙனே சொல்லுவர் என்று அவர் கூற, இப்பொருள் கூறவல்லபட்டரை நாம் ஸேபிக்கவேணுமென்று அவருக்குக் காதல் கிளர்ந்த்தாகப் பெரியோர் கூறுவர். பட்டருடைய அருளிச் செய்லாக நஞ்சீயர் கேட்டு விஷ்மயப்பட்ட அர்த்த விசேஷனங்கள் பலவற்றுள் இதுவுமென்றென்க.
சிலை குனித்தா னென்றது – கொன்ற னென்றபடி. மங்கல வழக்கு பிராட்டிக்காக இராவணனைக் கொன்றொழித்தபடியேக் கூறுகின்றான் செந்துவர்வா யென்று தொடங்கி.
