(2435)
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
பதவுரை
|
தேவர் ஆய் நிற்கும் அத்தேவம் |
– |
(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும், |
|
முது புணர்ப்பும் |
– |
அநாதியான நிலைமையும் |
|
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம் |
– |
மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்) |
|
அத் தேவரில் |
– |
அந்த தேவர்களுக்குள்ளே |
|
மூவர் ஆய் நிற்கும் |
– |
த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற |
|
நெடுமால் என்று ஓராதார் |
– |
ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந்துணர மாட்டாதவர்கள் |
|
கற்கின்றது எல்லாம் கடை |
– |
பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸகல தெய்வங்களும் ஸகலபதாரத்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுக்கு சேஷபூதம் என்றறியமாட்டாதவர்கள் எவ்வளவு விரிவாகக் கற்றாலும் அத்தனையும் பயனற்றவை யென்கிறார். தேவராய் நிற்குமுத்தேவும் நெடுமால், அத்தேவரில் மூவராய்நிற்கும் நெடுமால் புணர்ப்பும் நெடுமால், யாவராய்நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று அறியவல்லாருடைய கல்வியே பயன்பெற்றதாம் என்றவாறு.
தேவராய் நிற்குமத்தேவும் – வேதத்தில் கருமகாண்டங்களில் அந்தந்த யாகங்களுக்கு ஆராத்யதேவதையாக அக்நி இந்திரன் வருணன் என்றிப்படி சொல்லப்பட்டுள்ள தேவதைகள் யாவும் “***“ என்கிற கருதியின்படி எம்பெருமானுக்குச் சரீர பூதங்களாதலால் அத்தேவதைகட்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே அந்தந்த தேவதா நாமங்களினால் கூறப்பட்டுளன் என்று உணர வேண்டுவது கல்விக்குப் பயன்.
அத்தேவரில் மூவராய் நிற்கும் மதுபுணர்ப்பம் – 1. “***“ என்கிறபயே த்ரமூர்த்தியவதார மெடுத்த்தும் திருமாலே. இப்படி பிரித்துபிபிரித்துச் சொல்லுவதுன்? யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமால். “***“ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானுடைய நிலைமை வாய்ந்தவர்களே கற்றுணர்ந்தவராவர் என்கை.
English Translation
All the gods with divinity in them, the Trimurti coming down from yore, and all the sentient beings here, -all these are the lord Nedumai. Those who do not realise this have spent a lifetime learning trash.
