(1972)
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே.
பதவுரை
|
மன் இலங்கு |
– |
(பல) அரசாகள் விளங்கா நின்ற |
|
பாரதத்து |
– |
பாரதயுத்தத்திலே |
|
தேர் ஊர்ந்து |
– |
(சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும் |
|
மாவலியை |
– |
மஹாபலியை |
|
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து |
– |
பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும் |
|
பொரு கடல் சூழ் |
– |
அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட |
|
தென்இலங்கை |
– |
தென்னிலங்கையினுடைய |
|
ஈடு |
– |
மதிப்பை |
|
அழித்த |
– |
அழித்தவனாயுமிருக்கிற |
|
தேவற்கு |
– |
எம்பெருமானுக்கு |
|
என் இலங்கு சங்கோடு |
– |
எனது ஒளிமிக்கவைகளைகளையும் |
|
எழில் |
– |
அழகையும் |
|
தோற்றிருந்தேன் |
– |
இழந்திரா நின்றேன் |
|
இது காணீர் |
– |
இவ்விருப்பைக் காணுங்கோள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பலபல அரசர்கள் திரண்டு கிடந்த பாரதப் போரிலே பாண்டவர்கட்கு வெற்றியுண்டாக்குமாறு பார்த்தஸாரதியா யிருந்து தேரை நடத்தினவனும், கண்ணுங் கண்ணீருமாக வந்து அடிபணிந்து இரந்த இந்திரனுக்குத் திருவுள்ள மிரங்கி மாவலியைப் பாதாளத்திலே செலுத்தினவனும், கடல் சூழ்ந்த இலங்காபுரியை யீடழித்தவனுமான எம்பெருமானை ஆசைப்பட்டு நான் பெற்ற பேறு வளையிழந்ததும் நிறமழிந்ததுமே காணீர்! என்று படியெடுத்துக் காட்டுகிறாள் பரகாலநாயகி.
English Translation
In the great Bharata war the Lord drove Arjuna;s chariot. He held the mighty mabali captive in a huge golden cage. He destroyed the ocean-girdled Lanka. Look at this, I have lost my bangles, and my rouge to him!
