(1961)
அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி
கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே.
பதவுரை
|
அன்று |
– |
முன்பொருகால் |
|
பாரதத்து |
– |
பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக |
|
ஐவர் தூதன் ஆய் |
– |
பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய் |
|
சென்று |
– |
எழுந்தருளின |
|
மாயனை |
– |
ஆச்சரிய சக்தியுத்தனும் |
|
செம் கண் மாலினை |
– |
செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக |
|
மன்றில் ஆர் புகழ் |
– |
நூறத்திகள் தோறும் நிறைந்த |
|
மங்கை |
– |
திருமங்கை நாட்டையுடையவரும் |
|
வாள் |
– |
வாட்படை கொண்டவருமான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார்(அருளிச்செய்த) |
|
சொல் |
– |
இந்த ஸ்ரீ ஸூக்திகளை |
|
வல்லார்க்கு |
– |
ஓதவல்லவாக்ளுக்கு |
|
அல்லல் இல்லை |
– |
ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது. |
English Translation
These are songs in praise of the wonder Lord senkanmai who went as a messenger to the five in the Bharata war, by the fomous Mangai king Kalikanri. Thos who master it will be never despair.
