(1950)

(1950)

இன்னா ரென்றறியேன்,

அன்னே. ஆழியொடும்,

பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,

இன்னா ரென்றறியேன்.

 

பதவுரை

அன்னே

அம்மே!

ஆழியொடும்

திருவாழியாழ்வானையும்

பொன்ஆர் சார்ங்கம்

அழகுபொருந்திய சார்ங்க வில்லையும்

உடைய

(திருக்கையிலே) உடைய வரான

அடிகளை

ஸ்வாமியை

 

இன்னார்என்று

இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன்

அறியேன்

இன்னார்என்று அறியேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால் இங்கேபோதுங் கொலோ” என்று கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய வருகையைப் பிரார்த்தித்து மநோரதித்த பரகால நாயகிக்கு உருவெளிப்பாட்டாலே காட்சி தந்தருளுனான் எம்பெருமான்; ஆழியும் சார்ங்கமு மேந்திவந்து ஸேவை ஸாதித்தான்; அஸாதாரண லக்ஷணங்களைக் காணா நிற்கச் செய்தேயும்; இன்னாரென்று அறுதியிடக்கூடாமலிருக்கிறதாயிற்று அத்தலையில் வைலக்ஷண்யம். பெருமையைப் பார்க்குமிடத்தில் தேவனென்னலாயிருந்தது; எளிமையைப் பார்க்குமிடத்தில் மனிதாரிலே ஒருவனென்னலாயிருந்தது; ஆகவே ‘இன்னாரென்றறியேன்’ என்கிறாள். – வியப்புக்குறிப்பிடைச் சொல். ஆடிகள் – ஸ்வாமி.

 

English Translation

I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top