(1947)

(1947)

கோழி கூவென்னுமால்,

தோழி நானென்செய்கேன்,

ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று

கோழி கூவென்னுமால்.

பதவுரை

தோழி

வாராய் தோழீ
கோழி கூ என்னும்

கோழியானது கூவென்று கத்துகிறது
ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று

கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று
ஆல்

ஸந்தோஷம்

(மறுபடியும்)

கோழி கூ என்னும்

கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே!

(எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே)

நான் என்செய் கேன்

நான் என்னபண்ணுவேன்
ஆல்

கஷ்டம்!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘கோழி கூவென்னுமால், ஆழிவண்ணா’ வரும் பொழுதாயிற்று; கோழி கூவென்னுமால்! தோழி நான் என் செய்கேன்; என்று அந்வயித்துக் கொள்க. கண்ணபிரான் முதலில் சாமக்கோழி கூவினதும் தன் குறித்த பெண்ணுடன் கலவி செய்யச் சென்று, மீண்டும் அக்கோழி கூவினவாறே அவளை விட்டு பிஜீவது என்று ஒரு நியதியுண்டு. இந்த நியதியையறிந்த பரகாலநாயகி, தன் தோழியை நோக்கி ‘கோழி கூவென்னுமால் ஆழி வண்ணா’ வரும்பொழுதாயிற்று; என்றாள்; கோழியானது கூவென்று கூவாநின்றபடியால் கடல்வண்ணனான கண்ணபிரான் என்னோடு கலவிசெய்தற்கு வருங்காலமாயிற்று என்று மகிழ்ந்து சொன்னபடி. ;பலபலவூழிகளாயிடும் அன்றியோர்நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்ஞ்” (திருவிருததம்) என்கிறபடியே விச்லேஷகாலம் அனேக கல்பங்களாகவும் ஸம்ச்லேஷ கால அதிஸ்வல்ப காலமாகவும் தோற்றுவது இயல்வாதலால் இவள் கிருஷ்ண ஷம்ச்லேஷம் நிகழ்ந்து முடிவதாகக் கொண்டு வருந்தித் ‘தோழி!’ நான் என் செய்கேன்! கோழி கூவென்னுமால்; என்கிறாள். ஐயோ தோழி! நுர்ன் என் செய்வது! மறுபடியும் கோழி கூவென்னப் போகிறதே! கோழி கூவினால் கண்ணன் ஓடிப்போய்விடுவனே! என்றபடி.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்-‘கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக்கொண்டுவரும் போலே காணும் என்று பட்டா’ அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே” என்றுள்ள ஸ்ரீஸூக்தி குறிக்கொள்ளத்தக்கது. ஸம்ச்லேஷஸமயத்தை ஸூசிப்பிக்கின்ற கோழியும் விச்லேஷஸமயத்தை ஸூசிப்பிக்கின்ற கோழியும் இப்பாட்டில் ஒருங்கே ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால் பட்டா; இங்ஙனே ரஸோக்தியாக அருளிச்செய்வரென்க. ஆல்-மகிழ்ச்சியும் வருத்தமும் தோன்றநின்ற இடைச்சொல். (முதலடியில் மகிழ்ச்சி; ஈற்றடியில் வருத்தம்)

English Translation

The cock is crowing. Aho! sister, what can I do? Now it;s Time for the dark one to come to me.  The cock is crowing. Aho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top