(1945)
கொட்டாய் பல்லிக்குட்டி,
குடமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
கொட்டாய் பல்லிக்குட்டி.
பதவுரை
|
பல்லக்குட்டி |
– |
ஓ பல்லிக்குட்டி! |
|
குடம் ஆடி |
– |
குடக் கூத்தாடினவனும் |
|
மட்டு ஆர்பூ குழல் |
|
தேன் பொருந்தி ணிந்த திருக்குழற்கற்றை யையுடையவனும் |
|
மாதவனை |
– |
திருமகள் கொழுநனுமான எம் பெருமானை |
|
வா |
– |
இங்கே வருமாறு |
|
கொட்டாய் |
– |
ஒலிசெய் |
|
பல்லிக்குட்டி கொட்டாய்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகவழக்கில் பல்லிசொல்லுக்குப் பலன் சொல்வதுண்டு “பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோவுண்டு பண்டுபண்டே” எனற் திருவிருத்தமுங் காண்க. பல்லிக்குட்டி தன்னடையே ஒலிசெய்யுமதைக் கொண்டு இஷ்டஸித்தியை ஊஹிக்க வேண்டியிருக்க, இவன் தானாகவே ‘கொட்டாய் பல்லிக் குட்டி!’ என்றது வியாமோஹத்தினாலென்க.
English Translation
Tut, tut, little Lizard! Dancing on a pot he measured the Universe, wears flower-coiffure, Madavani Tut his arrival.
