(1943)
கரையாய் காக்கைப்பிள்ளாய்,
கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய்.
பதவுரை
|
காக்கைப் பிள்ளாய் |
– |
காக்கைக்குட்டியே! |
|
கரு மா முகில் போல் நிறத்தன் |
– |
காளமேகநிறத்தனாய் |
|
உரை ஆர்தொல் புகழ் |
– |
சொற்களில் நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான |
|
உத்தமனை |
– |
புரஷோத்தமனை |
|
வர கரையாய் |
– |
வருமாறு கூப்பிடவேணும் |
|
காக்கைப் பிள்ளாய்! கரையாய் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வீட்டின் முற்றத்திலே காக்கை வந்திருந்துகொண்டு கத்தினால் இஷ்ட ஜநத்தின் வருகை நேருமென்று சகுன சாஸ்திரிகள் சொல்லுவதுண்டு; அஃதறிந்து ‘கரையாய் காக்கைப்பிள்ளாய்!” என்கிறாள். “காக்கை வாயிலுங் கட்டுரைகொள்வர் காரணாகருளக் கொடியானே!” (5-1-1). என்ற பெரியாழ்வார்திருமொழி இங்கு உணரத்தக்கது.
‘காக்காய்!’ என்னாதே ‘காக்கைப்பிள்ளாய்! என்றது கௌரவப்பேச்சு’ பகவத் விஷயத்தில் உபகாரம் செய்பவர்களை மாரியாதையுடனே துதித்துச்சொல்ல வேண்டுதல் மரபு என்பது இதனால் ஸூசிப்பிக்கப்படுமென்ப. கரைதல் – ஒலிசெய்தல்.
English Translation
Caw, Caw, Good Crow, Sir! Dark as a cloud, he;s spoken of as perfection personified! Caw his arrival!
