(1942)
திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார்தொல்புகழ் மாதவ
னைவரத் திருத்தாய் செம்போத்தே.
பதவுரை
|
செம்போத்தே |
– |
ஓசெம்போத்துப் பட்சியே! |
|
திருமாமாள் தன் கணவன் |
– |
பெரியபிராட்டியார்க்கு கொழுநனாய் |
|
மருதர் |
– |
மணம் மிக்க மாலையை யணிந்துள்ளவனாய் |
|
தொல் புகழ் |
– |
நித்யஸித்தமான கீர்த்தியை யுடையவனான |
|
மாதவனை |
– |
எம்பெருமானை |
|
வர திருத்தாய் |
– |
இங்கே வருமாறு நீதிருந்த வேணும்; |
|
செம்போத்தே! திருத்தாய் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- செம்போத்து என்னும் பறவை வலமானால் அபீஷ்டமான காரியம் கடுகஸித்திக்குமென்பது சகுந சாஸ்திரிகளின் கொள்கையாதலால் அஃதறிந்த பரகாலநாயகி செம்போத்தை நோக்கி ‘எம்பெருமான் இங்கே வந்து சேருகையாகிற என்னுடைய உத்தேச்யம் கை புகும்படி நீ வலமாகவேணும்’ என்று வேண்டுகிறாள். ‘திருத்தாய்’ என்ற வினைமுற்றின் கருத்து இதுவே.
அது, தன்னடையே வலமானால் நல்ல சகுண மெனப்படுமேயன்றி அதனை நோக்கி; நீ வலமாகவேணுமென்பது தகுதியோ? பூர்ண கும்பத்துடனே ஸூமங்கலி எதிர்வரப் புறப்படுகை நல்ல சகுனமென்றால் இது தைவாதீனமாக நேர்ந்தால் சகுணமாகுமேயல்லது தாமாகவே ஒரு ஸூமங்கலியைப் பூர்ணகும்பத்துடனே வரச்சொல்லிவிட்டுப் புறப்படுதல் தகுதியன்றே; இப்பரகாலநாயகி “திருத்தாய் செம்போத்தே!” என்றும் “கரையாய் காக்கைப் பிள்ளாய்!” என்றும் “கொட்டாய் பல்லிக்குட்டீ!” என்றும் சகுனங்களை ஸ்வப்ரயத்நத்தாலே ஏதுக்காக உண்டாக்கப் பார்க்கிறாள்? என்று சங்கை பிறக்கக்கூடும். கேண்மின் செம்போத்து வலம் வருதல், காக்கை கூவுதல், பல்லிக்கொட்டுதல் முதலியவை இஷ்டஸித்திக்கு ஸூசகங்கள் மாத்திரமேயன்றி இவைதாமே இஷ்டங்களைப் பெறுவிப்பனவல்ல என்பது உண்மையேயாயினும், வியாமோஹாதிசய்திதனால் அதனை மறந்து, இவைதாமே எம் பெருமானை இங்குக்கொண்டுவந்து சேர்க்கும்படியான சக்தி வாய்ந்தவை என்று ப்ரமித்து இங்ஙனே அருளிச்செய்வதாகக் கொள்க. மயர்வறமதிநலம ருளப்பெற்ற ஆழ்வார்க்கும் ப்ரமமுண்டாக லாமோவென்னில்; இந்த ப்ரமம் காமநிபந்தனமானதன்று; ஒப்புயர்வற்ற பகவத்ப்ராவண்யாதிசயத்தினால் உண்டாவதாதலால் உத்தேச்யமாகவேயிருக்கும். “ஜ்ஞாநவிபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்ச பெறும்” என்ற ஸ்ரீவசநபூஷணஸூக்தியும் ஸ்மாரிக்கத்தக்கது.
இத்திருமொழியில் பரசுரந்தோறும் முதலடியும் ஈற்றடியும் ஒன்றேயா யிருக்கும், ஆதராதிசயத்தினால் இரட்டித்துச் சொல்லுகிறபடி.
English Translation
Screech, O Red Pheasant! Sri-Dame Lord is famous, wearing Fragrant Tulasi, Madavan, Screech his arrival!
