(1941)
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே வெண்டுறை.
பதவுரை
|
வேட்டந்தை கருதாது |
– |
மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல் |
|
அடி இணை வணங்கி |
– |
தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க |
|
மெய்ம்மை நின்ற |
– |
(அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும் |
|
தோடு அலர் பை தார் சுடர் முடியானை |
– |
இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான |
|
எம் பெருமானை |
– |
எம்பெருமானை நோக்கி, |
|
வாள் திறல் தானே |
– |
வாள் வலி கொண்ட சேனையையுடையவரும் |
|
மங்கையர் தலைவன் |
– |
திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் |
|
மானம் வேல் |
– |
பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வாருடைய |
|
வாய் ஒலிகள் |
– |
ஸ்ரீஸூக்தியாய் |
|
பழமொழியால் பணிந்து உரைத்த |
– |
பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான |
|
பாட்டு இவை பாட |
– |
இப்பாசுரங்களைப் பாடவே |
|
சித்தம் |
– |
(பாடுமவர்களது) நெஞ்சானது |
|
பத்திமை பெருகி |
– |
பரமபக்திதலையெடுக்கப் பெற்று |
|
திருவொடு மிகும் |
– |
(எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேட்டமாவது ஆசைப்பெருக்கம். இஹலோகத்து ஐச்வரியம் ஸ்வர்க்கலோகத்து ஐச்வரியம கைவல்ய மோக்ஷம் முதலானவற்றை விரும்பாமல் ஸ்வயம் ப்ரயோஜநமாகத் திருவடி பணியுமவர்கள் பக்கலிலே உண்மையாக்க் கடாக்ஷித் தருள்பவன் எம்பெருமான் என்கிறது முதலடி. வணங்கி – எச்சத்திரிவு, வணங்க என்றபடி. நின்ற எம்பெருமான், நின்றெம்பெருமான், தொகுத்தல் விகாரம். மெய்ம்மை நிற்றலாவது – விரைவில் அழியக் கூடியவைகளும் அற்பங்களுமான பலன்களைக்கொடுத்துவிடாதே சாச்வதமாய்ச் சிறந்த்தான பரம புருஷார்த்த்த்தை அளிப்பவனாக அமைதல்.
இத்திருமொழியில் பாசுரந்தோறும் ஒவ்வொரு பழமொழியை யிட்டு அருளிச்செய்திருக்கையாலே பழமொழியால் பணிந்துரைத்த பாட்டிவை எனப்பட்டது.
English Translation
This garland of proverb-songs by sharp-spear-wielding Mangai king kaliyan is praise offered of the feet of the Lord of Tulasi garland-wreath without any desire for immediate returns. By signing it, the heat will be filled with Bhakti and the wealth of joy.
