(1929)
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,
தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,
எக்கே இதுவென் னிதுவென் னிதுவென்னோ.
பதவுரை
|
புக்கு |
– |
(பொய்கையிலே) குதித்து |
|
ஆடு அரவம் பிடித்து |
– |
படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து |
|
ஆட்டும் |
– |
ஆட்டிவாட்டின |
|
புனிதீர் |
– |
பரிசுத்தரே! |
|
இக்காலங்கள் |
– |
இப்போது |
|
யாம் |
– |
நாங்கள் |
|
உமக்கு |
– |
உமக்கு |
|
ஏது ஒன்றும் அல்லோம் |
– |
ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம், |
|
தக்கார் |
– |
உமக்குத் தகுத்திருப்பவர்களாய் |
|
பலர் |
– |
அளவற்றவர்களான |
|
தேவிமார் |
– |
மஹிஷீவர்க்கங்களை |
|
சால |
– |
மிகவும் |
|
உடையீர் |
– |
உடையராயிருக்கின்றீர் |
|
எக்நே |
– |
இது என்ன கஷ்டகாலம்! |
|
இதுஎன் இதுஎன் இதுஎன் |
||
English Translation
O pure one who entered the lake and shook the dancing snake! All this while we meant nothing you, You have many befitting ladies in your keep. O what is this, What is this, What is this?
