(1918)

(1918)

அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ ஆயர் மடமக் களைப்,

பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து,

அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப,

மங்கைநல் லீர்வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும்.

 

பதவுரை

நம்பி

கண்ணபிரானே!

ஆயர் மடம் மக்களை

இடையர்களுக்கு விதேயரான பெண்பிள்ளைகளிடத்தில்

அங்ஙனும்

அப்படியும்

தீமைகள் செய்வர்களோ

தீம்புகள் செய்யத் தகுமோ?

பங்கயம் நீர்

தாமரைப்பொய்கையிலே

குடைந்து

அவகாஹித்து

ஆடுகின்றார்கள் பின்னே சென்று

நீராடப்போனவர்களின் பின்னேபோய்

ஒளித்து இருந்து

மறைந்து கொண்டிருந்து

அங்கு

அவ்விடத்தில்

அவர்

அந்தப் பெண்பிள்ளைகளினுடைய

பூ துகில்

அழகிய சேலைகளை

வாரிக் கொண்டிட்டு

வாரிக்கொண்டு

(அவ்வளவிலே)

அரவு ஏர் இடையார்

அரவுபோலே நுண்ணிய இடையையுடையரான அப்பெண்கள்

இரப்ப

(அத்துகில்களை) யாசிக்க

நல் மங்கைமீர்

அழகிய பெண்காள்!

வந்து

(நானிருக்குமிடத்திலே) வந்து

கொள்மின்

(உங்கள் துகில்களைப்) பெற்றுக் கொள்ளுங் கோள்’

என்று

என்று சொல்லி

மரம் ஏறி இருந்தாய் போலும்

மரத்தினுச்சியில் ஏறியிருந்தாயாமே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் கண்ணபிரானைப் பொடிவதற்குச் சிறிது தொடங்கின யசோதை இது முதலாக மூன்று பாசுரங்களிலே தான் கேள்விப்பட்டிருந்த சில சேஷ்டிதங்களை யெடுத்துரைத்து இப்படியும் தீமை செய்யலாமோ வென்கிறாள்.

 

English Translation

O Lord! How could you do such things to innoent cowherd girls? You followed them to the lotus tank, hid and made off with their clothes while they bathed, climbed up a tree and said, “Girls, come up and take your clothes!” -while the thin waisted girls stood in the water pleading

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top