(1917)

(1917)

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யைப்,

பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற பாகந் தான்வை யார்களே,

கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை,

நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ என்செய்கே னென்செய் கேனோ.


பதவுரை

நங்கைகாள்

பெண்காள்!

சொல்லி அழைத்திட அஞ்சுவன்

(இவன் செய்யுந்தீம்புகளைச்) சொல்லி முறைப்பட அஞ்சுகின்றேன்,

பஞ்சியம் மெல் அடி பிள்ளைகள்

பஞசுபோல் மெல்லிய அடியை யுடையரான (இவ்வூர்ப்) பிள்ளைகள்

ஆயிரம் நாழி நெய்யை

ஆயிரம் நாழி நிறைந்த நெய்யை

உண்கின்று

உண்ணும்போது

பாகம் தான் வையார்களே

ஸ்வல்பபாகமும் மிகுத்தி வைத்தார்களில்லை,

கஞ்சன்

கம்ஸனானவன்

கறவு

(அவனுக்குச் செலுத்தவேண்டிய) கப்பமோவென்றால்

எட்டு நாளில்

இன்னமும் எட்டுநாளைக்குள் செலுத்தவேண்டிய தாகவுள்ளது.

என் கைவலத்து

என்கையில்

ஆதும் இல்லை

ஒன்றுமில்லை

நம்பி

கண்ணபிரானே!

நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய்

என்னெஞ்சு புண்பட்டிருக்கும்படியான காரியங்களையே செய்து போகிறாய்

என் செய்கேன் என் செய்கேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் இரண்டு பாட்டிலும் ‘இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே’ என்றும் ‘உரப்புவதஞ்சுவனே’ என்றும் சொன்ன யசோதைப் பிராட்டியை நோக்கி ஆய்ச்சிகளெல்லாரும் ‘நங்காய்! தாய்க்கு அடங்காதவன் ஊர்க்கு அடங்கான் என்னும் பழமொழி உனக்குத் தெரியாததன்று, நீயே இப்படி கைவிட்டால் இனி நாங்கள் வாழும் வகையுண்டோ? எங்கள் நெய் பால் தயிர் முதலானவற்றை யெல்லாம் பறிகொடுப்பதேயோ எங்கள் தலைவிதி?; என்று கண்ணுங் கண்ணீருமாய்ச் சொல்ல, அவர்களுக்கும் மறுமாற்றஞ் சொல்லிக் கண்ணபிரானையுமு் லகுவாகப் பொடிகின்றாள் யசோதை.

ஊர்ப்பிள்ளைகள் நெய்பால் முதலியவற்றை யுண்பதற்கு உள்ளே புகும்போது, பூனைபோல் ஓசைபடாமல் மெத்தெனப் புகும்படியைத் தெஜீவிப்பதாம் பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் என்பது. (உண்சின்று) திருவாய்மொழியில் (10-2-5) “அமரர்கோன் அர்ச்சிக்கின்று“ என்ற பிரயோகத்தை யொத்த தாமிது.

மூன்றாமடியில் கறவு என்றது, கர, என்னும் வட சொல்லடியான தமிழ்ச்சொல் என்னலாம், கப்பம் என்று பொருள்.

கம்ஸனுடைய ராஜதானியாகிய வடமதுரையைச் சார்ந்த விடங்களில் வாழ்பவர்கள் வருஷத்துக் கொருமுறை கம்ஸனுக்குக் கப்பங்கட்டுவது வழங்க மென்பது ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் (5-5-2) முதலிய இடங்களிற் காணத்தக்கன.

 

English Translation

O Ladies, I fear to speak of this, O Lard! Your soft-footed friends have not left even half of the thousand pots of Ghee I had saved.  Alas, Kamsa is cruel. I have to pay my taxes to him within a week, I have no savings.  Your acts have broken my heart. Alas, what shall I do, what shall I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top