(1908)

(1908)

மான முடைத்துங்க ளாயர் குலமத னால்பிறர் மக்கள் தம்மை

ஊன முடையன செய்யப் பெறாயென்  றிரப்ப னுரப்ப கில்லேன்

நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நானென் செய்கேன்?

தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர்கடை கின்றான் போலும்.

 

பதவுரை

உங்கள் ஆயர் குலம்

‘உங்களிடைக்குலமானது

மானம் உடைத்து அதனால்

மானத்தோடு வாழுந்தன்மையுடைய தாகையாலே

பிறர் மக்கள் தம்மை

அயலாருடைய பெண்பிள்ளைகளிடத்திலே

ஊனம் உடையன செய்ய பெறாய் என்று

இழிவான செயல்களைச் செய்யாதொழிய வேணும்’ என்று

இரப்பன்

வேண்டிக் கொள்வனேயன்றி

உரப்ப கில்லேன்

வெருட்டி வார்த்தை சொல்லியறியேன்

நங்கைகாள்

பெண்பிள்ளைகாள்!

நானும் உரைத்திலேன்

(தாயாகிய) நானும் ஒன்று (சீறிச்) சொல்லியறியேன்,

நந்தன்

(தகப்பனாரான) நந்தகோபரும்

பணித்திலன்

ஒன்று சொல்லமாட்டார்,

(தாய்தந்தையரான நாங்களிருவரும் இப்படி உதாஸீநராயிருப்பதுவே காரணமாக)

தானும்

கண்ணபிரான்தானும்

ஓர் கன்னியும்

ஒரு இளவாய்க் கன்னியுமாய்க்கொண்டு

கீழை அகத்து

கீழண்டை வீட்டில்

தயிர் கடை கின்றான் போலும்

தயிர் கடைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது,

நான் என் செய்கேன்?-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் செய்த சில தீமைகளைச் சில ஆய்ச்சியர் யசோதைப் பிராட்டி பக்கலிலே வந்து முறையிட, அதற்கு அவ்யசோதை ஆய்ச்சியரை நோக்கி கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

(உங்களாயர்குலம் மானமுடைத்து) “கோளார் ஆபர் குலத்தவ ரிப்பழிகெட்டேன்! வாழ்வில்லை“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க. மாநம், ஊநம் – வடசொற்கள். (உரப்பகில்லேன்) “அஞ்சவுரப்பா ளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்ற நாச்சியார் திருமொழியுங் காண்க. உரப்புதல் – அதட்டுதல். (நானுமுரைத்திலேன்) கீழ் “உரப்பகில்லேன்“ என்றதன் அநுவாதமே யிதுவும்.

 

English Translation

O Ladies! I could only plead with him and say, “Your cowherd-talk are respectable people.  Please do not go about destroying the neighbours; daughter;s.  I could not scold him, nor could Nandagopa do anything.  If looks like he and a maiden are churning curds in the outhouse.  Alas, what can I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top