(1900)

(1900)

உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்

விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,

வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,

அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.

 

பதவுரை

உலப்பு இல் வலியால்

எல்லையில்லாத வலிமையினால்

எழுந்த

பெரிய கிளர்த்தியோடே தோன்றி

மது கைடவர்கள் அவர்பால்

மதுகடைபர்களென்கிற அவ்வசுரர்களோடே

வயிரம்

பகை

விளைந்திட்டது என்று எண்ணி

உண்டாகிவிட்ட தென்றறிந்து

உளைந்திட்டு

அஞ்சி நடுங்கி

விண்ணோர்

தேவர்கள்

பரவ

(திருவடிகளிலே தொழுது) துதிக்க,

(அத் தேவர்களுக்காக)

 

அவர்

அந்த மதுகைடபர்களுடைய

நாள்

ஆயுளை

ஒழித்த

முடித்த

பெருமான்

ஸர்பேச்வரனாய்

(அதுவுமல்லாமல்)

முனநாள்

முற்காலத்தில்

வளைந்திட்ட வில்லாளி

வளைந்தவில்லைக் கையிலேந்தியுள்ளவனும்

வல் வாள் எயிறு

வலிமை பொருந்திப் பிறங்கிய பற்களை யுடையவனும்

மலை போல்

மலைபோன்றவனுமான

அவுணம்

இரணியாசுரனுடைய

உடல்

உடலை

வள் உகிரால்

கூர்மையான நகங்களினால்

அளைந்திட்ட வன் காண்மின்

இரண்டாகக் கிழித்தவனன்றோ

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்

உண்டு ஆப்புண்டு இருந்தவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மதுகைடபர்களை மாளச்செய்த பெருமையையும் இரணியாசுரனுடலைப் பிளந்த வலிமையையும் பேசி இப்படிப்பட்ட பராக்ரமசாலி காண்மின் இன்று அசக்தரைப் போலே கூட்டுண்டு கிடக்கிறானென்கிறார்.

 

English Translation

When the gods found the boundless strength of Madhu-kaitabha a cause for fear and enemity, they sought the help of the Lord, who ended the Asuras; lives. He is also the one who came against the mighty bow-wielding, flerce Hiranya and tore his chest apart. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top