(1897)

(1897)

காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,

பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட

சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்

தாராளா, கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி.

 

பதவுரை

கார் ஆர் புயல் கை

கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய்

மங்கையர் கோன்

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய்

பேராளன்

பெருமை பொருந்தியவரான

கலி கன்றி

திருமங்கையாழ்வாருடைய

நெஞ்சில்

திருவுள்ளத்திலே

பிரியாது

ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல்

இடம் கொண்ட

நித்யவாஸம் பண்ணுகின்ற

சீரானா

சீர்மை பொருந்தியவனே!

செம் தாமரை கண்ணா

செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே!

தண் துழாய் தார் ஆளா

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே!

சப்பாணி கொட்டாய்

தட மார்வா

விசாலமான திருமார்வை யுடையவனே!

சப்பாணி கொட்டாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தாமான தன்மையிற் பேசாதே பிறருடைய நிலைமையை ஏறிட்டுக் கொண்டு பேசும் பதிகங்களில் இறுதியில் வரும் நிகமனப்பாசுரம் மாத்திரம் வேறுபட்டு வருகிற வழக்கம் இதில் மாறிற்று. முதற்பாட்டில் இவர்மேல் வந்து புகுந்த யசோதை நிலைமை இப்பாட்டிலும் நீங்கவில்லையாயிற்று. இதுவும் யசோதைப்பிராட்டி சொல்லுவதுபோலவே அமைந்துள்ளது. (என் னெஞ்சிற்போலவே) திருமங்கையாழ்வார் திருவுள்ளத்திலுங் குடிகொண்டிருக்கும் திருமாலே! சப்பாணி கொட்டவேணுமென்று யசோதை சொல்வதாகவே தலைக்கட்டிற்றாயிற்று.

இத்திருமொழி கற்பார்க்குப் பயனுரையாதொழிந்தது, இப்படிப்பட்ட பிரார்த்தனையை பயனாக அமையும் என்று காட்டுதற்குப்போலும்.

 

English Translation

O Lotus-eyed Lord krishna, forever gracing the heart of the benevolent and benign king kalikanri! Clap chappni! O Lord with wide auspicious chest graced by cool Tulasi garlands! Clap chappani!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top