(1896)
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி.
பதவுரை
|
கள்ளம் குழவி ஆய் |
– |
மாயக் குழந்தையாய்ப் பிறந்து |
|
சகடத்தை |
– |
(அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை |
|
காலால் தள்ளி உதைத்திட்டு |
– |
திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும் |
|
தாய் ஆய் வருவாளை |
– |
தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை |
|
மெள்ள தொடர்ந்து பிடித்து |
– |
விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து |
|
ஆர் உயிர் |
– |
(அவளது) அருமையான உயிரை |
|
உண்ட |
– |
கவர்ந்தவனான |
|
வள்ளலே |
– |
உதாரனே! |
|
சப்பாணி கொண்டாய் |
– |
பால் வண்ணனே! சப்பாணி கொட்டாய் |
English Translation
O Benevolent Lord, wonder-child! You smote the bedevilled cart with your feet, then when a woman came to breast-feed you, you grabbed her by stealth and took her life! Clap Chappani! Adorable Lord! Clap Chappani!
