(1895)

(1895)

யாயும் பிறரும் அறியாத யாமத்து,

மாய வலவைப்பெண் வந்து முலைதர,

பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,

வாயவ னே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே!கொட்டாய் சப்பாணி.

 

பதவுரை

யாயும்

பெற்ற தாயாகிய நானும்

பிறரும்

மற்றுமுள்ளவர்களும்

அறியாத

கண்விழித்திருக்கப் பெறாமல் உறங்கிக் கொண்டிருந்த

யாமத்து

நடுச்சாமத்திலே

மாயம்

வஞ்சகையாய்

அலவை பெண்

துஷ்டஸ்த்ரீயான பூதனை

வந்து

(கம்ஸனால் ஏவப்பட்டுத் திருவாய்ப்பாடிக்கு) வந்து

முலை தா

முலைகொடுத்தவளவிலே

அவளை

அப்பூதனையை

பேய் என்று பிடித்து

பேய்ச்சி யென்றறிந்து பிடித்துக்கொண்டு

உயிர் உண்ட

(அம்முலைவழியே அவளது) பிராணனைக் கவர்ந்த

வாயவனே

திருப்பவளத்தை யுடையவனே!

சப்பாணி கொட்டாய்

மால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய தொட்டிற்பருவத்தில் நிகழ்ந்த சிறுச்சேவகங்களுள் பூதனையின் முலையைச் சுவைத் துயிருண்டது மிக்க பயங்கரமாதலால் அதனை அடுத்தடுத்து எடுத்துப் பேசுகிறாள்.

யாய் என்றாலும் மோய் என்றாலும் தாய்க்குப் பெயர். யாமம் – வடசொல் அலவை -கெட்டுப்போனவள் என்றபடி. பஹுவாக ஜல்பநம்பண்ணிக் கொண்டு வருபவள் என்றருளிச்செய்வர். பெரியவாச்சான் பிள்ளை. தாய்வடிவுகொண்டு வருகிறாளாகையாலே ‘என்குட்டனே! வா, என் முத்தமே! வா, என் செல்வமே! வா’ என்று போலிப் பிதற்றல்களைச் செய்துகொண்டு வருபவளென்றவாறு.

 

English Translation

In the dead of night, while neither your mother nor friends were watching, a beautiful stranger came and gave you her breast you discovered that she was an ogress, and took her life with your mouthil Clap Chappani O Pleasing one, clap chappani!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top