(1887)

(1887)

இம்மை யிடர்க்கெட வேண்டி  ஏந்தெழில் தோள்கலி கன்றி

செம்மைப் பனுவல்நூல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை

அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்

மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே கலித்தாழிசை.

 

பதவுரை

எழில ஏந்து தோள் கலிகன்றி

அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார்

இம்மை இடர்கெட வேண்டி

இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி

செம் கண் நெடியவன் தன்னை

புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி

செம்மை நூல் பனுவல் கொண்டு

சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு

அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும்

‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும்

மெய்ம்மை

யதார்த்தமான அன்பு பொலிய

மனத்து வைத்து

நெஞ்சிற்கொண்டு

ஏத்த

அநுஸந்திக்குமளவில்

விண்ணவர் ஆகலும் ஆம்

நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இம்மையிடர்கெடவேண்டி“ என்றதற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்யும் பொருளின் சீர்மையைக் குறிக்கொண்மின்,

“இவள் முலை கொடுத்தல்லது தரியாதாப் போலே ஆழ்வார் கவிபாடியல்லது தரியாதாராய்ப் பாடின கவியாயிற்று“.

என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. ஆழ்வார் இப்பாசுரங்களை வாய்விட்டுப் பாடாவிடில் இடர்படுவர், அவ்விடர் உண்டாகாதபடி கவிபாடின ரென்க.

 

English Translation

This garland of ten songs inviting the red-eyed Lord to come and take suck was sung by strong armed Kalikanri. Those who can sing it with a rue heart will become celestials

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top