(1883)

(1883)

பிள்ளைய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை

கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி

உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற

பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய்.

 

பதவுரை

பிள்ளைகள் செய்வன செய்யாய்

(உன்னோடொத்த பருவமுள்ள) பிள்ளைகள் செய்யும் தீம்புகளை நீ செய்கின்றிலை,

பேசில்

உன்னைப்பற்றிச் சொல்வோமாகில்

பெரிதும் வலியை

மிகவும் மிடுக்குடையனாயிரா நின்றாய்,

மனத்தில்

நெஞ்சிலே

கள்ளம் உடைய

கபடத்தை வஹியாநின்றாய்,

காணவே

(தண்டிக்க வேண்டியவர்களும்) பார்த்துக்கொண்டிருக்கும்படியாக

தீமைகள்

தீம்புகளை

செய்தி

செய்கின்றாய்,

என் உள்ளம் உருகி

என்னுடைய நெஞ்சு நீர்ப்பண்டமாகி

கொங்கை

முலைகளும்

ஓட்டந்து பாய்ந்திடுகின்ற

பால் பெருகிப் பாயப்பெறுகின்றன

பள்ளி குறிப்பு செய்யாதே

(கொட்டாவி விடுதல் முதலிய) தூக்கக் களைச்செர்

பால் அமுது உண்ண நீ வாராய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் செய்யுந் தீமைகளைப் பாசுரமிட்டுச் சொல்லில் கண்ணெச்சில்படுமென்று பொதுப்படையாகப் பிள்ளைகள் செய்வன செய்யாய்; என்றும், ‘பேசில்பெரிதும் வலியை’ என்றும் சொல்லுகிறாளென்றுணர்க.

 

English Translation

You do not behave like a child; you are much stronger than the other children, and full of mischief. You perform such acts right under our gaze.  My heart melts for you, my breast overflows with milk. Do not pretend to sleep.  Come, take suck! O Strong one, take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top