(1882)

(1882)

மைத்த கருங்குஞ்சி மைந்தா மாமரு தூடு நடந்தாய்,

வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,

இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,

உத்தமனே அம்மம் உண்ணாய் உலகளந் தாய் அம்மம் உண்ணாய்.

 

பதவுரை

மைத்தகரு குஞ்சி

மைபோன்ற கறுத்த திருக்குழல்களையுடைய

மைந்தா

சிறுக்கனே!

மா மருதூடு

பெரிய மருதமரங்களினுடைய

நடந்தாய்

தவழ்ந்து சென்றவனே!

விரையாதே

ஸாவகாசமாக

வித்தகனே

ஆச்சரியசக்திவாய்ந்தவனே!

விரையாதே

ஸாவகாசமாக

வெண்ணெய் விழுங்கும்

வெண்ணெயை வாரி விழுங்கவல்ல

விகிர்தா

விலக்ஷணனே!

என் தன் கொங்கை

என்னுடைய ஸ்தனமானது

சுரந்து

பால்சுரந்து

இத்தனை போது அன்றி

இதுவரையிலிருந்தது போலல்லாமல்

இருக்க கில்லா

இனி இருக்கமாட்டா

உத்தமனே

சிறந்த குணசாலியே!

அம்மம் உண்ணாய்

 

உலகு அளந்தாய்

உலகமளந்தபிரானே!

அம்மம் உண்ணாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘விரையாதே வெண்ணெய் விழுங்கும்’ என்றதில் இவனுடைய சாதுரியம் தொனிக்கும், வெண்ணெயுண்பதில் பதற்றத்தினால் யசோதே படுக்கையிற் சென்று சாய்வதற்கு முன்னமே அவஸரப்பட்டு எடுத்து விழுங்கிவிட்டுக் கையும்பிடியுமாய் அகப்பட்டுக்கொள்ளாதே ஆரப்பொறுத்து மெதுவாகச் சென்று வாரி விழுங்குவனாம். விகிர்தா! ‘விக்ருத’ என்னும் வடசொல் திரிந்து விளியுருபு ஏற்றது. அச்சொல் -வேறுபட்டவனென்னும் பொருளுடையது, எங்குங் கண்டறியாத சாதுர்யமுடையவனே! என்றவாறு.

 

English Translation

O Dark-tressed Lord! You walked between the twin Marudu trees! O Naughty child, forever eating butter! My swollen breasts cannot stand the wait so long. O Pure one, take suck! O Lord who measured the Earth, take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top