(1876)

(1876)

ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்

ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்

சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்

கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே.

 

பதவுரை

ஏடு ஒத்த

பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும்

நீள்

நீண்டதாயும்

இலை

இலையையுடைத்தாயுமிருக்கிற

வேல்

வேற்படையை

ஏந்தும்

கையிற்கொண்ட

எங்கள் இராவணனார்

எங்கள் பிரபுவான இராவணன்

ஓடி போனார்

முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்

நாங்கள்

நாங்களோ

எய்த்தோம்

இளைத்தோம்,

உய்வது ஓர் காரணத்தால்

(இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு

உங்கள் கோமான் ஆணை

உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை

சூடிப் போந்தோம்

சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம்

தொடரேல் மின்

(எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா,

கூடி கூடி

திரள் திரளாகக் குழாங்கூடி

குழமணிதூரம் ஆடுகின்றோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியின் இரண்டாம்பாட்டில் “நம்பி அனுமா! சுக்கிரீவா! அங்கதனே! நளனே!“ என்றுள்ள விளிகள் இப்பாட்டில் அநுஸந்திக்கவுரியன. வானர முதலிகளே! கையில் வேற்படை பிடித்துப் பெருமதிப்பனாயிருந்த எங்கள் பிரபு ஆயுதங்களறுப்புண்டு முதுகுகாட்டி ஓடிப்போனான், நாங்களோ வென்னில், ;இவர்களையோ கொல்லுவது!; என்று நீங்கள்தாமும் இரங்கும்படியாக இளைத்தொழிந்தோம், அவ்வளவேயன்று, உங்கள் தலைவரான இராமபிரான் கரலாலே இட்டதைத் தலையாலே தங்கிச் செய்துமுடிக்க வல்லலோமாக விதேயராய் வந்துநிற்கின்றோம், இனி நீங்கள் எங்களைக் கொல்வதாகத் தொடர வொண்ணாது, நாங்கள் கூட்டங்கூட்டமாக இருக்கிறோமென்பதைக் கண்டு ‘போர்புரிய நிற்கின்றார்கள் இவர்கள்’ என்று நீங்கள் நினைக்கலாகாது, குழமணி தூரமாடுதற்கே திரள்திரளாக இருக்கின்றோங்காண்மின் என்கிறார்கள்.

எங்களிராவணனார் ஓடிப்போனார் -இராவணன் போர்க்களத்தில் நின்றும் வீட்டுக்கு ஓடிச்சென்றானென்பது இதற்குப் பொருளன்று, இவ்வுலகைவிட்டு யமலோகத்திற்கு ஓடிப்போனானென்று பொருளாகவேணும், இவ்விடத்தில் உயிரோடிருந்தும் இல்லையென்று சொல்லும்படியாகவே ஆய்விட்டான் என்றாவது கொள்ளவேணும்.

‘உய்வதோர் காரணத்தால்’ என்பது நடுநிலைத் தீபகமாகி முன்னும் பின்னும் அந்வயிக்கும், உய்வதோர் காரணத்தால் நாங்கள் எய்த்தோம். உய்வதோர் காரணத்தால் உங்கள் கோமானாணை சூடிப்போந்தோம் என்பதாக.

 

English Translation

Our King Ravana wielding a tall spear with a wide blade fled, while we became fired. Pray do not pursue us, we surrender to your king;s command. We gather in hordes and dance the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top