(1873)
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே.
பதவுரை
|
(வானர முதலிகான்!) |
||
|
உங்கள் கோமான் |
– |
உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், |
|
கல்லில் |
– |
மலைகளைக்கொண்டு |
|
முந்நீர் |
– |
கடலை |
|
மாற்றி வந்து |
– |
(அணைகட்டித்) தகைந்து |
|
இலங்கை |
– |
லங்கையிலுள்ள |
|
காவல் |
– |
அரண்களையும் |
|
கடந்து |
– |
அதிக்ரமித்து |
|
எம்மை |
– |
எங்களை |
|
அமர் களத்து |
– |
யுத்தபூமியிலே |
|
அல்லல் செய்தான் |
– |
மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார் |
|
வெம் கதிரோன் சிறுவர் |
– |
ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே! |
|
வெல்ல கில்லாது |
– |
(உங்களை) ஜயிக்க மாட்டாமல் |
|
அஞ்சினோ |
– |
பயப்படுகின்றோம் |
|
கொல்ல வேண்டா |
– |
எங்களைக் கொல்லாதொழிய வேணும் |
|
குழமணிதூரம் ஆடுகின்றோம் காண் |
||
English Translation
Your Lord made a bridge of rocks and crossed over to Lanka, then shattered the bastions and entered the city, engaged us in a battle and routed us. O Son of the Sun Sugrival Look, we have conceded our defeat, Pray do not kill us. We are frightened. we dance the kulamani Duram
