(1844)

(1844)

கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை

நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,

குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந்

தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.

பதவுரை

கன்று கொண்டு

வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்கனி

கபித்தாஸுரன் மீது
எறிந்து

வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும்
ஆநிரைக்கு அழிவு என்று

பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து
மா மழை

பெருமழையை
நின்று காத்து

நிலைநின்று தடுத்து
உகந்தான்

திருவுள்ளமுவந்தவனும்
நிலம் மா மகட்கு

பூமிப்பிராட்டிக்கு
இனியான்

போக்யனுமான எம்பெருமான்
இள தென்றல்

இளமைதங்கிய தென்றற்கொற்று
குன்றின் முல்லையின் வாசமும்

மலைமுல்லைப்பூக்களின் பரிமளத்தையும்
குளிர் மல்லிகை மணமும்

குளிர்ந்த கொடிமல்லிகையின் பரிமளத்தையும்
அளைந்து

முகந்துகொண்டு
வந்து உலவும்

வந்து (வீதிகளில்) உலாவப்பெற்ற
திருக்கோட்டியூரான்

திருக்கோட்டியூரிலுள்ளான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில் ‘அழிவென்று’ என்றபாடத்திற் காட்டிலும் ;அழவன்று; என்றபாடம் சிறக்கும், வியாக்கியானத்திற்கும் நன்கு பொருந்தும், “பசுக்களுக்கு அழிவு வருமன்று“ என்பது வியாக்கியான வாக்கியம். (அழிவன்று – கெடுதல் நேர்ந்த காலத்திலே).

English Translation

The sweet Lord of Dame Earth came in the yore as Krishna, swirled the Asuric calf against a wood-apple tree, then held a mountain against rains to protect the cows.  He resides in Tirukkottiyur where the cool breeze blows over mountain Mullai and cool Jasmine flowers, wafting their fragrance everywhere

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top