nalaeram_logo.jpg
(3168)

வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,

செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,

கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,

தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?

பதவுரை

வம்பு அவிழ்  கோதை பொருட்டா

-

நறுமணம் மிக்க பூமாலையணிந்துள்ள நப்பின்னைக்காக

மால் விடை ஏழும் அடர்த்த

-

பெரிய ரிஷபங்களேழையும் வலியக்கினவனும்

செம் பவளம் திரள் வாயன்

-

சிவந்த பவளம் போன்று திரண்ட அதரத்தையுடையவனுமான

சரீதரன்

-

திருமாலினது

தொல் புகழ்

-

நிஜமான புகழை

பாடி

-

வாயாரப்பாடி

கும்பிடு நட்டம் இட்டு ஆடி

-

தலைகீழாகக் கூத்தாடி

கோகு உகட்டுண்டு

-

அடிடவுகேடு தலையெடுத்து

உழலாதார்

-

ஸம்ப்ரமியாதவர்கள்

சாது சனங்கள் இடையே

-

ஸாத்விக ஜனங்களின் நடுவிலே

தம் பிறப்பால்

-

ஜனிப்பதனால்

என் பயன்

-

என்ன பயனோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கும்பனென்னும் இடையவர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தைகந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகையும் கண்ணபிரான் ஏழுதிருவுருககொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்ற இவ்வரலாற்றை அழகாகப் பாடிக்கொண்டு தலைகீழாகக் கூத்தாடி அடைவுகெட ஆராவாரஞ்செய்து திரியாத பாவிகள் ஸாத்விக கோஷ்டிகளின் நடுவே தாங்களும் சிலராய்ப் பிறந்து திரிவது ஏனோ என்று வெறுத்துரைக்கின்றார்.

வம்பவிழ்கோதை- கோதையென்று பூமாலைக்குப் பெயர்; அதனைணிந்துள்ள மயிர்முடிக்குஇலக்கணை. பரமைளம் மிகுந்த அளகபாரத்தையுடைய நப்பின்னையென்று பொருள்படுதலால் அன்மொழித்தொகை.

செம்பவளத்திரள்வாயன் - விரோதி நிரஸநஞ்செய்து திருமணம் புணர்ந்த உவப்பினால் முறுவல்செய்து நின்றநிலை ஆழ்வார்க்கு ப்ரத்யக்ஷஸமமாயிருக்கிறபடி. தொல்புகழ் -அந்த எருதுகிள் வலியையடக்கின்து ஈ எறும்பு கொசு முதலியவற்றை நசுக்குவதபோலே கண்ணபிரானுனக்கு ஆயாஸமறச் செய்த செயலாலதலால் அதனைத் தொல்புகழென்கிறாரல்லர்;  அப்பெருமானுடைய ஸௌலப்ய ஸௌசீல்யங்களே இங்குத் தொல்புகழாரம்.

கோகுஉகட்டுண்டு =கோகு-அடைவுகேடு (அதாவது) அக்கிரம்; அதுமேலிட்டு; * அத்யந்தபக்தியுக்தாநாம் த சாஸ்த்ரம் நைவச க்ரம *என்கிறபடியே பக்தியின் மிகுதி சொன்னவாறு. வில்லிபுத்தூரார் பாரதத்தில், விராடபருவம்-நிரைமீட்சிச் சருக்கத்தில் (68) “ஏகுகின்ற பேரிராசராசனை யெதிர்தகைந்து, கோகுதட்டிடு தனஞ்சயனிவையிவை கூறும்” என்ற செய்யுளில் “கோகுதட்டிடு” எனவருதலுங் காண்க.

“பயனென்னே சாதுசனங்களிடையே” என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:-

“திருப்புன்னைக்குக் கீழே ஒருவரிருக்குமிடத்திலே நம்முதலிகள் பத்துப் பேர்வட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, க்ராமணிகள் மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளம் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாபோலே காண்! என்று பிள்ளைப்பிள்ளை.” என்பதாம்.

இதன் கருத்தாவது- திருவரங்கம் பெரியகோயிலில் திருப்புன்னைமரத்தின் கீழே நம் முதலிகள் இரந்து சாஸ்த்ரார்த்த விசாரங்கள் செய்தருளாநிற்பார்கள்; அவற்றைக் கேட்டுக் களிக்கவேணுமென்கிற ஆசையினால், நெருக்கமான அவ்விடத்திலும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர்மேலொருவராக நெருக்கிக்கொண்டு நின்று கேட்பர்களாம்; ஸ்ரீவைஷ்ணவர்கள் எத்தனை பேர்கள் நெருக்கினாலும் வரந்தமில்லை; அந்தநெருக்கத்தைக்கண்டு ஸாமாந்யஜனங்களும் அங்குத் தங்களுக்க ஏதோ லாபம் கிடைப்பதாக மயங்கி, மொசமொசவென்று மயிர்கள் நெருங்கிய தோள்களும் ஸ்தூலதேஹமும் தலைப்பாகையுமாய் அங்கே புகுந்து நெருக்குவது வழக்கமாம்; அது எப்படி அஸஹ்யமோ, அப்படியே ஸாத்விக ஜநங்களிடையே பாபிகள் பிறந்திருப்பதும் அஸஹ்யமென்றதாயிற்று. பிள்ளைப்பிள்ளை யென்பவர் கூரத்தாழ்வான் திருவடிகளில் ஒருவர்.

English Translation

Sing the praise of Sridhara of coral lips who killed seven bulls for the love of Nappinnai. Dance with hands over your heads, -dignity be blown, -or else what use is this birth amid saintly men?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain