nalaeram_logo.jpg
(1776)

ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப்

பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்

ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப்

போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே.

பதவுரை

மாதே

-

தோழிப்பெண்ணே,!

நமக்கே நலம் ஆதலில்

-

நமக்கே புருஷார்த்தமாதலால்

(நாம்)

குளித்து

-

ஸ்நாநம்பண்ணி

நாமம் ஓதி

-

(பிரானுடைய) திருநாமங்களை ஓதி

ஒளி மா மலர்பதம்

-

ஒளிபொருந்திய சிறந்த திருவடிவத் தாமரைகளை

உச்சிதன்னால்

-

தலையினால்

நாளும் பணிவோம்

-

நாள்தோறும் தொழக் கடவோம்;

ஆது தாரான் எனிலும்

-

(அப்பிரான் ஒன்றும் தரமாட்டானேலும்

தரும்

-

தந்திடுவன்;

அன்றியும்

-

தரினும் தாராதொழியினும்

அன்பராய்

-

பக்தராய்

அவன் மன்னு புல்வாணியே

-

அவன் பொருந்தி வாழும் திருப்புல்லாணியையே

தொழுதும்

-

தொழுவோம்,

போது

-

வா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவரையில், அவனுடைய விஷயீகாரமே பேற்றுக்கு உபாயமென்றும், நாம் உபாயாதுஷ்டாநம் பண்ணவேண்டியது ஒன்றுமில்லையென்றும் ஸ்வருபவுணர்ச்சியின்படியே முறை வழுவாதிருந்தோம்; இருந்தவளவிலும் அவனே வந்து விஷயீகரிக்கக் கண்டிலோம்; பெற்றபோது பேறுகிறோமென்று ஆறியிருக்குந் தன்மையோ நமக்கில்லை; வழியல்லாவழியே முயன்றாகிலும் பெற்றுத் தீரவேண்டிய அபிநிவேசம் கிளர்ந்தான் பின்பு இனி நாமே நம்தலையாலே சில உயாங்களைய நுஷ்டித்தாகிலும் பெறப் பார்க்கும் அத்தனையன்றோ. நாம் காலக்ஷேபத்தின் பொருட்டு ஸ்வயம் போக்யமாகச் செய்ய வேண்டிய காரியங்களையும் இனி உபாயமாகச் செய்யக்கடவோம்; இடைவிடாது திருநாமஸங்கீர்த்தனம் பண்ணக்கடவோம்; (குளித்து) ஸாதநாநுஷ்டாநத்திற்கு அதிகாரிகளாக வேண்டுவதற்காக ஸ்நாநம்பண்ணிப் பரிசுத்தமாயிருக்க வேணுமென்பதுண்டே; அதுவும் பண்ணக்கடவோம். சுத்தியும் அசுத்தியும் தேடவேண்டாதே இருந்த படியே அதிகாரியாதற்குரிய நிலைமையிலிருந்த நாம் இனி நியமநிர்ப்பந்தமுள்ள வழியிலே அந்வயிப்போமென்கிறாள். (உச்சிதன்னொலொளி மாமலர்ப் பாதம் நாளும் பணிவோம்) ஒளிமாமலர் பாதமாகையாலே அத்திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு ஸ்வயம் ப்ரயோஜகமாக அவற்றைச் சிரமேற் கொள்ளவேணுமென்றிருந்த நாம் இனி உபாயமாக இக்காரியத்தை அனுட்டிப்போம்.

என்றிவ்வளவும் தோழியை நோக்கிப் பரகாலநாயகி சொன்னவாறே தோழியானவள் ;கெடுவாய்! பெருமான் அரைக்ஷணம் தாமதித்தானென்று இப்படியும் செய்யத் துணியலாமோ? அவனையுமழித்து உன்னையுமழித்துக கொள்ளப் பார்க்கிறாயே, அது தகுதியன்றே; என்றுசொல்ல; அதற்கு உத்தரம் போல ;நமக்கே கலமாதலில் என்கிறாள். இதன் கருத்தை விவரிப்போம்;- தோழீ! ;ஓதி நாமங் குளிததுச் சீதன்னாலொளிமாமலர்ப்பாதம் நாளும் பணிவோம்; என்று சொன்ன என்னை நோக்கி என்ன சொன்னாய் நீ? அவனையுமழித்து உன்னையுமழித்துக் கொள்ளப்பார்க்கிறாயே; என்று சொன்னாய்; இதில் என்னையழித்துக் கொள்வதாகச் சொன்னது பழுது; என்னையழித்துக் கொள்ளும் முயற்சி யொன்றும் நான் செயிகின்றிலேன்;  பகவத்கீதை முதலியவற்றில் ஸாதநாநுஷ்டாகம் பண்ணும்படி அவன் தானே சோதிவாய் திறந்து நியமித்துப் போந்தவற்றையே நான் அனுட்டிக்க முற்படுகிறேன்; நிரபேக்ஷமாக ரக்ஷிக்கக் கடவேனென்று சொல்லியிருக்கிற அவனை அழிக்கிறேனென்பது உண்மை; அவனுடைய ஸ்வரூபத்துக்கு அழிவுவாராமே நோக்கவேணுமென்று இதுகாறும் விரதம் கொண்டிருந்தது போதும்; இனி மேலுள்ள காலமெல்லாம நமக்கே நன்மை பார்க்கக் கடவோம்; * ;தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்த” என்றிருந்து நாம வாழ்ந்த வாழ்வுபோதும் - என்பதாம்.

இப்படி சொன்ன பரகால நாயகியை நோக்கித் தோழியானவள் ;நங்காய்! நீ எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணினாலும் பலன் அளிக்க வேண்டியவன் அவனன்றோ; அவன் உனக்கு ஒன்றுங் கொடுப்பதில்லையென்று ஸங்கல்பங் கொண்டிருக்குமளவும் நீ எது செய்மாலென்ன? அவன் உனக்கு ஒன்றும் தாரான்காண்; என்ன; ;ஆது தாரானெனிலும் தரும்; என்கிறாள். அவன் ஒன்றும் கொடுக்கமாட்டேனென்று முஷ்டி பிடித்தாலும் பிடிக்கட்டும்; என்னுடைய ப்ரஹ்மாஸ்த்ரம் (-உபாயாநுஷ்டாநம்) பலன் கொடுத்தன்றி நில்லாது என்றாளாயிற்று.

அன்றியும் அன்பாய் அவன் மன்னு புல்லாணியே தொழுதும் = பலன் கிடைக்கவுமாம், கிடைக்காமற் போகவுமாம்; நாம் பக்தியுக்தராய்க் கொண்டு திருப்புல்லாணியைச் சென்று தொழுவோமென்கை.

இத்தனை பதற்றம் நமக்கு ஆகுமோ என்று தோழி மயங்கிநின்றாள் போலும்; போதுமாதே! என்று வலியப் பிடித்திழுக்கிறபடி.

English Translation

O Heart! Let us take a holy dip, recite the Lord;s names, and bow our heads to his radiant lotus feet every day, -even if he gives us nothing by it, - because it is good for us. Besides, the practice makes devotees of us.  He resides in Pullani, Bow that-a-ways and arise

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain