(654)

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்

காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே

 

பதவுரை

கோல் ஆர்ந்த

-

அம்புகளோடு கூடிய

நெடு சார்ங்கம்

-

பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்

கூன் நல் சங்கம்

-

வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்

கோலை ஆழி

-

(எதிரிகளைக்) கொலைசெய்ய வல்ல ஸூதர்சநமும்

கொடு தண்டு

-

(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில்புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்

கொற்றம் ஒள் வாள்

-

வெற்றிபெற்று ஒளிமிக்க நந்தகமென்னும் வாளும்

கால் ஆர்ந்த கடும் கதி

-

வாயுவேகம் போன்ற மிகவும் விரைந்த நடையையுடைய

கருடன் என்னும்

-

பெரியதிருவடி யென்னும் பேரையுடைய

வென்றி பறவை இவை அனைத்தும்

-

ஐயசீலமான பக்க்ஷிராஜனும் (ஆகிய)

இவையெல்லாம்

புறம் சூழ் காப்ப

-

நாற்புறமும் சூழ்ந்துகொண்டு ரக்ஷையிட

சேல்ஆர்ந்த நெடு கழனி

-

(நீர்வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான

கழனிகளாலும்

சோலை சூழ்ந்த

-

சோலைகளாலும் சூழப்பட்ட

திரு அரங்கத்து அரவு அணையில்

பள்ளி கொள்ளும்;

மாலோனை

-

ஸர்வாதிகனான எம்பெருமானை

வல் வினையேன்

-

மஹாபாபியான அடியேன்

கண்டு

-

ஸேவிக்கப்பெற்று

இன்பம் கல்வி எய்தி

-

ஆநந்தமயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று

வாழும் நாள் என்று கொல்

-

வாழ்வது என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரிவர்க்கங்களும் ‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்னதீங்கு நேரிடுமோ? அன்று அதிநங்கை பண்ணி எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெரிய பெருமாளை, ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹாபாபத்தைப் பண்ணி நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப்போகிறேன் என்கிறார். இப்பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்

 

English Translation

My beautiful Lord reclines on a serpent-bed in Arangam surrounded by fields and groves of fish- thriving waters. He is guarded by the five sentinels, --the big bow-and-arrow Sarnga, the gracefully curved conch Panchajanya, the terrible mace Koumodaki, the dagger with a sheen Nandaki and the deadly discus Sudarsana. The Victorious bird Garuda whose fight is speedier then the wind stands in attendance. O Woeful me, when will see and experience the joy of union with him?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain