(649)

எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு

எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்

அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே

 

பதவுரை

எமாண்பின் அயன்

-

ஸர்வவிதத்தாலு முண்டான மாட்சிமையையுடைய நான்முகன்

நான்கு நாவினாலும் (தனது)

-

நாலு நாக்கினாலும்

எடுத்து

-

சொற்களை யெடுத்து

ஏத்தி

-

துதித்து

ஈர் இரண்டு முகமும் கொண்டு

-

நான்கு முகங்களாலும்

இனிது ஏத்தி

-

இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி

எழில் கண்கள் எட்டினோடும்

-

அழகிய எட்டுகண்களினாலே

எம்மாடும்

-

எல்லாப்பக்கங்களிலும்

தொழுது இறைஞ்ச நின்ற

-

நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த

செம்பொன்

-

செவ்விய பொன்போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய

கமலம் மலர் கொப்பூழ்

-

தாமரைப் பூவையுடைய திருநாபியானது

தோன்ற

-

விளங்கும்படி

அணி அரங்கத்து அரவு அணையில்

பள்ளி கொள்ளும்;

அம்மான் தன்

-

பெரிய பெருமாளையுடைய

அடிஇணை கீழ்

-

திருவடிகளின் கீழே

அலர்கள் இட்டு

-

- புஷ்பங்களை ஸமர்ப்பித்து

அங்கு அடியவரோடு

-

அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட

அணுகும் நாள் என்று கொல்

-

நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் வாயாரவாழ்த்திக் கண்ணாரக்கண்டு களிக்கும்படியாவும், ஸகலலோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக்கமலம் நன்கு விளங்கும்படியாகவும் திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளாநின்ற பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடுகூட அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்யஸந்நிதானத்திற்குப்போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

எம்மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன்வசமாகக் கைக்கொண்டிருக்கும் அதிசயத்தையுடையவன் என்பது உட்கருத்து.

 

English Translation

In the Jewel-city of Arangam, the Lord reclines on a serpent bed, with the praiseworthy Brahma seated on a lotus emerging from a navel. The four-faced one with his eight bright eyes looks everywhere and bows in obeisance with folded hands, while his four tongues eternally chant the Lord’s everlasting praise. O, when will I strew flowers at the Lord’s feet and mingle with his devotees there?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain