nalaeram_logo.jpg
(645)

நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி

வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே

காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய

வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே

பதவுரை

நாட்டை படை என்று

-

உலகங்களை ஸ்ருஷ்டி என்று

அயன் முதலா

-

பிரமன் முதலான பிரஜாபதிகளை

தந்த

-

உண்டாக்கின

நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி

-

குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபியாகிற வீட்டையுண்டாக்கி

விளையாடும்

-

இப்படியாக லீலாரஸம் அநுபவிக்கிற

விமலன் தன்னை

-

பரமபாவனனான பெருமானை

தேனுகனும்

-

தேநுகாஸுரனும்

களிறும்

-

குவலயாபீடயானையும்

புரளும்

-

பகாஸுரனும்

உடன்மடிய

-

உடனே மாளும்படியாக

காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை

-

காட்டிற்சென்றுவேட்டையாடிவரும் அப்பெருமானை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறிது இடத்தைத்தானே கைதொட்டு ஸ்ருஷ்டித்து மேலுள்ளதையெல்லாம் ஸ்ருஷ்டிங்களென்று சதுர்முன் முதலான ப்ரஜாபதிகளையுண்டாக்கினவனும், அந்த நான் முகனுக்கிருப்பிமாகத் திருநாபிக் கமலத்தை புண்டாக்கித் தந்து இதுவே லீலையாக இருப்பணுமான பரமபுருஷனைக் கண்டதுண்டோ? கம்ஸன் ஏவின அஸுராவேம் பெற்ற ஐந்துக்களையெல்லாம் முடித்துக்கொண்டு வேட்டையாடிவந்த அப்பெருமானை விருந்தாவனத்திலே கண்டோம்

“அயன் முதலானவர்களை“ என்றதநிணங்க “நாட்டைப்படைமின்“ என்று பன்மையாகவன்றோ இருக்கவேணும், படை என்று ஒருமையாக இருத்தல் கூடுமோ? எனின், அயன் முதலானவர்களைத் தனித்தனியே விளித்து “நீநாட்டைப்படை“ எறு விதிதத்தாகக்கொள்க. “அயன் முதலாத்தந்த“ என்பதைவிட “அயன்றன்னைத்தந்த“ என்று படமாகில்அழகாயிருக்குமென்று நம்பிள்ளை அருளிச்செய்வாராம். அயன்-பிரானை, முதலா-முதன்மையாக தந்த-, என்றும் பொருள் கொள்ள இடமுகடு. அயன் -அஜ என்ற வடசொல்விகாரம். அ-எம்பெருமான் பக்கலில், ஜா-தோன்றினவன். விமலன் -லீலாரஸந்தவிர வேறொருபலனை விரும்பாமையாகிற தூய்மையுடையவன் என்கை.

தேனுகனை மடித்தவரலாறு -கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடுமேய்த்துக்கொண்டு பழங்க அழகாக மிகுதியாய்ப்பழுத்து வாஸனை வீசிக்கொண்டிருந்த ஒரு பங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ்வாத்துக்குத் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங்கொண்ட தேனுகாஸுரன் கோபகொண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய உடனே கண்ணன் அதிலாக்யமாய்ப் பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வாரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பதாம். தேனுகனைத் தொலைத்ததும் களிற்றைக் கொன்றதும் புள்ளின் வாய் கீண்டதும் வெவ்வேறு ஸமயங்களிலாகிலும் கண்ணபிரானுடைய ஏகப்ரயோகத்தாலேயே இவை மூன்றும் தொலைந்தன என்று ஆண்டாள் கருதுகின்றனள் போலும்-உடன்மடிய-என்கையாலே.

English Translation

“The Lord creates Brahma, and through him the worlds. Did you see the pure one, for whom all this is sport?” “The Lord who killed the bird, the calf and the elephant, came out of the forest after hunting; we saw him there in Brindavana”.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain