nalaeram_logo.jpg
(625)

கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்*

ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும்*

நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதே*

சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.

பதவுரை

கிளி

-

(நான் வளர்த்த) கிளியானது

கூட்டில் இருந்து

-

கூட்டில் இருந்துகொண்டு

எப்போதும்

-

ஸதாகாலமும்

கோவிந்தாகோவிந்தா என்று அழைக்கும்

-

கோவிந்தா கோவிந்தா வென்று கூவாநின்றது,

ஊட்டு கொடாது

-

உணவுகெடாமல் (பட்டினிகிடக்கும்படி)

செறுப்பன் ஆகில்

-

துன்பப்படுத்தினேனாகில்

உலகு அளந்தான் என்று

-

உலகளந்த பெருமானே! என்று

உயர கூவும்

-

உரக்கக்கூவாநின்றது!

(இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என்சரீரம் புறப்படக்கிளம்புகின்றது ஆசையால்)

நாட்டில்

-

இவ்வுலகில்

தலை பழி எய்தி

-

பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து

உங்கள் நன்மை இழந்து

-

உங்களுடைய நல்லபேரைக்கெடுத்துக்கொண்டு

தலை இடாதே

-

(பிறகு ஒருவரையுமு முகம் நோக்கமாட்டாமல்) தலைகவிழ்ந்து நிற்க வேண்டாதபடி,

சூடு உயர்மாடங்கள் சூழ்ந்து தோன்றும்

-

தலையுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற

துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்

-

என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவள் விரஹத்தாலே நோவுபட்டிருக்கிற இச்சமயத்தில் இவன் வளர்க்குங் கிளிப்பிள்ளையொன்று இவள் முன்பு கற்பித்துவைத்த திருநாமத்தைச் சொல்லிகொண்டு இங்குமங்கும் திரியத்தொடங்கிற்று, ‘இதை நாம்யதேச்சமாய்த் திரியும்படியாக விடவேயன்றோ இது கண்ணன் நாம்மேகுழறிக் கொல்லுகின்றது, இதைப்பிடித்து அடைத்திடுவோம்‘ என்று பார்த்துக்கூட்டிலே யடைத்தாள், அது அங்கேயிருந்து “கோவிந்தா! கோவிந்தா!“ என்று கூவத்தொடங்கிற்று, அதைக்கேட்ட ஆண்டாள் ‘இது சோற்றுச்செருக்காலேயன்றோ இப்படி சொல்லுகிறது, சோற்றைக் குறைத்தோமாகில் தன்னடையே தவிருகிறது‘ என்று நினைத்துப் பட்டினியாகவிட்டுவைத்தாள், ‘ஊணடங்க வீணடங்கும்‘ என்று இவளுடைய நினைவுபோலும். ஆனால் அந்தப்பட்டினியானது. இவளுக்கு விபரீதபலப்ரதமாயிற்று, அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெயிட்டுப் பட்டினி கிடந்து மிடற்றில் கனத்தை ஆற்றிப்பாடுவதுபோல இக்கிளியும் பட்டினிவிட்டதே காரணமாக உயரப்பாடத்தொடங்கிற்று, உலகளந்தான்!“ என்று அதுகூவும் போதை த்வநியைக்கேட்டால் அவன் அன்றிவ்வுலகமளக்கத் திருவடிகளைப் பரப்பினவிடமெங்கும் இதுவும் தன்மிடேற்றோசையைப் பரவவிடா நின்றதுபோலும், அந்தக்கூவுதலைக் கேட்டவாறே நாமே பதறிஓடியாகிலும் அவனைச்சென்று கிட்டுவோமென்கிறகாதல் கிளர்கின்றது. அப்படி நான் பதறி ஓடுவது நமது குடிக்குப் பெருத்தபழியாய் முடியும், தடிதடியாகத் தாய்மார்களிருந்தும் ஒரு பெண்பிள்ளைக்கு நன்மைசெய்யாமல் தெருவிலேபுறப்படப் பார்த்திருந்தார்களே!‘ என்று நாளைக்கே நாடெங்கும் பழிபரவும், அப்போது நீங்கள் தலைகவிழ்ந்து தலையைக்கீறி நிற்கத்தான் நேரிடும், அப்படிப்பட்ட பரிபவத்துக்கு நீங்கள் ஆளாகாமல் இப்போதே என்னைநீங்களாகவே த்வாரகையிலே கொண்டுசேர்த்து விடுங்களென்கிறாள்.

“உலகளந்தானென்றுயரக்கூவும்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி - “க்ருஷ்ணாவதாரத்தைவிட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீவாமநாவதாரத்தைச் சொல்லியாய்த்து நலிவது.“

கிளியானது கோவிந்தா கோவிந்தாவென்றும் உலகளந்தானென்றும் கூவினால் அந்தநாமஸ்ரவணமே தாரமாக இருக்கலாகாதா? அது திருநாமத்தைச் சொல்லக்கூடாடிதன்று இவள் தடைசெய்வதற்குக் காரணமென்? எனில் “உயிர்க்கதுகாலனென்றும்மை யானிரந்தேற்கு, நீர் குயிற்பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர், தயிர்பழஞ்சோற்றொடு பாலடிசிலுந்தந்து சொல் பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே“ என்ற திருவாய்மொழியை நோக்குக. ஸம்ஸ்லேஷகாலத்தில் போகமாயிருப்பவை விஸ்லேஷகாலத்தில் வெறுக்கக் கூடியனையாமென்க. -ஸ்ரீவசநபூசணத்தில் -“இந்த ஸ்வபாவ விசேஷங்கள் கல்யாணகுணங்களிலும் திருச்சரங்களிலும் திருநாமங்களிலும் திருக்குழலோசையிலுங் காணலாம்,“ (க-கந.) என்ற ஸூத்ரத்தின் வியாக்கியானத்தையும் ஸேவிக்க.

துவராபதியின் வரலாறு - ‘காலயவநன்‘ என்பானொருவன் செருக்கித்திரிந்து கொண்டிருக்கையில் ஒருகால் நாரதரைப்பார்த்து ‘இவ்வுலகில் யாராவது சூரர்களுண்டா? என்றுகேட்க, அதற்கு நாரதர் ‘மதுரையில் யாதவர்களிருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார், அக்காலயவநன் அதைக்கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்குவந்து யாதவர்களுடன் போர்செய்யத்தொடங்கினான், அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச்சென்று அங்கு ஸமுத்ர ராஜனையாசித்துப் பன்னிரண்டு யோஜனைவிஸ்தீர்ணமுள்ள இடத்தை வாங்கி அங்கு த்வாரகை என்றொரு பட்டணம் அமைத்து மதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக்கொண்டு போய்ச்சேர்ந்து அச்சங்கெடுத்தான் (பிறகு தான் மதுரைக்குவந்து காலயவநனையும் முடித்தான்)

English Translation

This caged parrot was starved and punished for calling ‘Govinda’ incessantly; she now screams, “Lord-who-measured-the-Earth”, louder. Do not earn the worlds abuse, and hang your heads in shame. Take me now to Dvaraka, the city surrounded by high-walled mansions.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain