nalaeram_logo.jpg
(622)

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்

ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று

வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று

பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்

பதவுரை

கார்

-

வர்ஷா காலத்தி லுண்டான

தண்

-

குளிர்ந்த

முகிலும்

-

மேகமும்

கருவிளையும்

-

கருவிளைப்பூவும்

காயா மலரும்

-

காயம்பூவும்

கமலம் பூவும்

-

தாமரைப் பூவுமாகிற இவைகள்

வந்திட்டு

-

எதிரே வந்து நின்று

இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன

-

“கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று என்னை வலிக்கின்றன. (ஆகையாலே)

பத்தவிலோசனத்து

-

பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே

வேர்த்து

-

“பசுமேயக்கிறச்ரமத்தாலே வேர்வையடைந்து

பசித்து

-

பசியினால் வருந்தி

வயிறு அசைந்து

-

வயிறுதளர்ந்து

வேண்டு அடிசில் உண்ணும்போது ஈது என்று

-

வேண்டிய ப்ரஸாதம் உண்ணவேண்டிய காலம் இது என்று

பார்த்திருந்து

-

(ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து

நெடு நோக்குக்கொள்ளும்

-

நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான

உய்த்திடுமின்

-

(என்னைக்) கொண்டுசேர்த்து விடுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கறுத்துக் குளிர்ந்த மேகங்களும் கருவிளைப் பூவும் காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனிக்குப் போலியாயிருக்கின்றமையாலும் தாமரைப்பூக்கள் அப்பிரானுடைய திவ்யாவயவங்களுக்குப் போலியாயிருக்கின்றமையாலும் அந்த மேகம் முதலியவற்றைக் காணும்போதே கண்ணபிரானுடைய ஸ்மரணம் அவர்ஜநீயமாகி அப்போதே அவனைச்சென்று சேரவேணுமென்கிற குதூஹலம்கிளர்கின்றபடியை ஒரு சமத்காரமாகப் பேசுகிறாள் முன்னடிகளில். “ஒக்குமம் மானுருவமென்று உள்ளம் குழைத்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்“ என்ற திருவாய்மொழியும், “பூவையு“ காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், காவிமலர் என்றுங்காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று.“ என்ற பெரியதிருவந்தாதியும் இங்கு அநுஸந்திக்கத்தான்.

பக்தவிலோசந மென்கிற புண்யதேஸத்திலே தன்னைக்கொண்டுபோய்விட வேணுமென்கிறாள் பின்னடிகளில் ஒருநாள் கண்ணபிரானும் பலராமனும் பசுகளுடன் இடையர்களுடன் யமுனையாற்றின் கரையிலே சென்று நெடும்போது பசுக்களை மேய்த்துக் களைத்து ஆற்றங்கரையில் ஓரிடத்திலே உட்கார்ந்தவளவில், இடைப்பிள்ளைகள் எல்லாரும் க்ருஷ்ண பலராமர்களை நோக்கி தங்களுடைய பசியின் கொடுமையைக் கூறி ‘இப்போதே நீங்கள் இப்பசியைப் போக்கியருள வேணும்‘ என்று மிக்க ஆர்த்தியுடன் பிரார்த்திக்க, அவர்களுடைய பரிதாபத்தையறிந்த கண்ணபிரான்‘ ‘ஓ பிள்ளைகளே! ஸமீபத்தில் சிலமஹர்ஷிகள் ஆங்கிரஸ மென்னும் வேள்வியை அநுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அவர்களிடம் போய் என்பெயரையும் என்தமையனார் பெயரையும் சொல்லி, இன்னாரால் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோமென்று கூறி அன்னம் விரும்புங்கள், பசிதீரும்‘ என்று கட்டளையிட்டனுப்பினான், அவர்களும் அங்ஙனமே அவ்விடஞ்சென்று  விநயகத்துடன் இவ்வண்ணம் விண்ணப்பஞ்செய்து அடிசில்வேண்ட, அவ்வந்தணர்கள் இவ்வாயர்களின் பேச்சை செவிகொடுத்துங்கேளாதொழியவே ஆய்ப்பிள்ளைகள் க்ருஷ்ண பலராமர்களிடம் மீண்டுவந்து செய்தியைச் சொல்ல, அது கேட்ட கண்ணபிரான் புன்முறுவல் செய்து ‘பிள்ளைகாள்! அந்த மஹர்ஷிகளுடைய தர்மபத்னிகள் இருக்கிறார்களே, அவர்களிடஞ்சென்று நானும் பலராமனும் இங்கே இருப்பதாகச் சொல்லி ப்ரஸாதம்கேளுங்கள், அப்பெண்டிர் தவறாதுதந்திடுவர்கள் என்று சொல்லி அவர்களை ரிஷிபத்தினிகளிடமனுப்ப, உடனே அவர்கள் அவ்விடஞ்சென்று அந்தரிஷிபத்னிகளை நமஸ்கரித்து, அம்மனைமீர்! இதோ ஸமீபத்தில் கண்ணபிரானும் நம்பி மூத்தபிரானும் பசுக்களை மேய்த்துக் களைத்திருக்கின்றனர், அவர்களோடு அநுசரர்களாக வந்த அஸ்மதாதிகளும் களைத்திருக்கின்றோம், எல்லாரும் பசிதீர்ந்து மகிழும்படி ப்ரஸாதம் தரவேணும் எனவேண்ட, அப்பெண்டிர்கள் ஸ்ரீக்ருஷ்ணநாமஸ்ரவண மாத்ரத்திலே பரமாநந்தடைந்து உடம்புமயிர்க்கூச்செறிந்து உடனே பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் -என நான்கு வகைப்பட்ட அன்னவர்கங்களையும் நல்ல நல்லபாத்திரங்களில் எடுத்துக்கொண்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களிருக்குமிடத்தை நோக்கிப் புறப்படுக்கையில் தந்தையார் தாய்மார் மக்கள் உடன்பிறந்தார் பார்த்தாக்கள் முதலானோர் எவ்வளவுதடுத்தும் அவர்களுடைய தடைக்கு உடன்படாதாராய் நிலைநின்ற பக்தி நிஷ்டையையுடையவர்களாய் விரைந்து வந்து யமுனையாற்றங்கரைச்சோலையிலே நம்பி மூத்தபிரானையும் கண்ணபிரானையும்ஸேவித்து, கொணர்ந்த அந்நவர்க்கங்களை ஸமர்ப்பித்துவிட்டுப் பரமாநந்த பூரிதர்களாய் மீண்டுசென்றனர். அவ்வடிசிலைக் கண்ணபிரான் அவ்வாயர் பிள்ளைகளுக்குத் தந்து தானும் அமுதுசெய்தான் - என்ற வரலாறு ஸ்ரீபாகவதத்தில் தஸமஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாமத்யாயத்தில் விரிவாகக் காணத்தக்கது.

ரிஷபத்தின் இவ்வண்ணமாக அடிசில் கொணந்துகொடுத்தது ஒருநாளேயல்ல, நாடோறும் கண்ணபிரான் யமுனையாற்றங்கரைச் சோலைகளிலே வந்து ஆநிரைமேய்த்துக் களைத்துப்போகிறளென்றுணர்ந்த அப்பெண்டிர் நெடுநாள்வரையில் நாடோறும் பகலில் உச்சிவேளையில் கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தார்களென்றும், ஒவ்வொருநாளும் அவர்கள் அடிசில் கொணரும் மையத்துக் குச்சரியாகக் கண்ணபிரானும் களைப்புடன் அவ்வடிசிலை எதிர்பார்த்து அத்திக்கையை நோக்கியிருப்பனென்றும் இப்பாட்டின் ப்ரஸங்கத்திலே அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளும்படி.

“வேண்ட்டிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருப்பது நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனம்“ - ‘நமக்கு ரிஷிபத்நிகள் ப்ரஸாதம் கொண்டு கொடுக்கும்வேளை அணுகிற்று‘ என்று அத்திசையைநோக்கி நெடிதாகக் சூர்ணிகையின் வியாக்கியானம் காண்க.

பத்தவிலோசனம் - “***“ பக்தமென்ற வடசொல்லுக்கு அன்னமென்றுபொருள், விலோசனமென்பதற்குப் பார்வையென்று பொருள், சோறு பார்த்திருக்குமிடமென்றதாயிற்று.

English Translation

The cool dark clouds, the karuvilai, the Kaya and the lotus flowers, haunt me say in, “Go to him, Go to him.” Take me then to Bhaktavilochanam, where he sits, sweating, hungry, tired, and looking afar, waiting to be fed.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain