nalaeram_logo.jpg
(621)

ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்துழ திப்படாதே

கார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்

நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து

போர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்

பதவுரை

அம்மனைமீர்

-

தாய்மார்களே!

என்

-

என்னுடைய

இது நோய்

-

இந்த வியாதியானது

ஆர்க்கும்

-

எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்

அறியல் ஆகாது

-

அறிய முடியாத்து, (ஆனால்)

துழதிப்படாதே

-

(இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்,

நீர் கரை நின்ற

-

காளிங்க மடுவின் கரையிலிருந்த

கடம்பை ஏறி

-

கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)

காளியன் உச்சியில்

-

காளியநாகத்தின் படத்தின்மேலே

கட்டம்பாய்ந்து

-

ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து

போர்களம் ஆக

-

அப்பொய்கை தானே யுத்தக்களமாம்படியாக

நிருத்தம்செய்த

-

நர்த்தனம் செய்யப் பெற்ற

பொய்கை கரைக்கு

-

மடுவின் கரையிலே

என்னை உய்த்திடுமின்

-

என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்.

கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன்

-

நீலக்கடல்போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்

தடவை

-

(தனது திருக்கைகளால் என்னைத்) தடவுவானாகில்

தீரும்

-

(இந்நோய்) தீர்ந்து விடும்

கை கண்ட யோகம்

-

(இதுதான்) கைமேலே பலிக்கக்கூடிய உபாயம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘நோவு இன்ன தென்றுணர்ந்து அதுக்குத் தகுதியாகவன்றோ பரஹாரம் பண்ணவேணும், யமுனைக்கரையிலே கொண்டு போட்டுவிட்டால் என்ன பரிஹாரம் செய்யப்பட்டதாகும்? இவளோ பித்தம் பிடித்தவள் போலவாய் வந்தபடி சொல்லுகிறாளே, இவளுடைய உண்மையான நோய் இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே!‘ என்று வருத்தப்படத் தொடங்கினதான் மார்களை நோக்கிக் கூறுகின்றாள் - அம்மணைமீர்! நீங்கள் என்னுடைய நோயை அறிந்து பரிஹரிக்கவா பார்க்கிறீர்கள்?, என்நோய் உங்களால் அறியக்கூடிய தன்று, இந்நோயை விளைத்தவனுக்கும் இது இவ்வளவென்று பரிசோதிக்கமுடியாது, ஆதலால் இந்தநோய்க்காக நீங்கள் துக்கப்படவேண்டா, நான் சொல்லுகிறபடியே பரிஹரிக்கப்பார்ப்பதே உங்களுக்கு நன்றாம், நான் சொல்லு முபாயம் வயபிசரித்துப்போகக்கூடியதன்று, கைகண்டவுபாயமாய்த்து நான் சொல்லுவது, அஃது என்னவுபாயமென்றால், கடல் வண்ண்ணான கண்ணபிரான் தனது திருக்கையாலே என்னைத் தடவிக்கொடுக்கு மத்தனையே வேண்டுவது, அவ்வளவிலே எனது நோய் தீர்ந்துவிடுங்காண்மின், ஆகையாலே என்னை இங்கு நின்றுங்கொண்டுபோய், அக்கண்ணபிரான் காளியனுச்சியிலே நடனஞ்செய்யப்பெற்ற இடமாகிய பெய்கையின் கரையிலே என்னைச் சேர்த்துவிடுங்களென்றாள். காளியனுச்சியிலே கூத்தாடின இளைப்பு ஆறும்படி அவனை முலைத்தடங்களாலே அணைத்து விடாயாற்றவேணுமென்று மநோரதிக்கிறாள்போலும்.

துழதிப்படுதல் - துக்கப்படுதல். “கார்க்கடல்வண்ண னென்பானொருவன் தடவத்தீரும், (இது) கைகண்டயோகம்“ என்று அந்வயம், யோகமாவது உபாயம். நட்டம் - ‘நாட்பம்‘ என்றவடசொல் நட்டமெனத்திரிந்தது, ‘ந்ருத்தம்‘ என்றவடசொல்லின் திரிபாகவுமாம். ந்ருத்தமென்பது நிருத்தமென்றும் நட்டமென்றும் திரியக்கூடும். பொய்கை - யமுனையாற்றில் ஓர் பகுதி.

English Translation

Nobody will understand this malaise, my Ladies, do not be sad. Take me now to that riverbank which turned into a ruddy battlefield when the dark Lord climbed the Kadamba tree, then jumped and trampled on the serpent Kaliya’s hood; his caress is the only remedy available to us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain