nalaeram_logo.jpg
(618)

நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்

பாணியா தென்னை மருந்துசெய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்

மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்

ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்

பதவுரை

இனி

-

இனிமேல்

நாணி

-

வெட்கப்பட்டு

ஓர் கரும்ம இல்லை

-

ஒரு பயனுமில்லை (ஏனெனில்)

நால் அயலாரும்

-

ஊரிலுள்ளாரெல்லாரும்

அறிந்தொழிந்தார்

-

(எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்

பாணியாது

-

காலதாமதமின்றி

மருந்து செய்து

-

வேண்டும் பரிஹாரங்களைச் செய்து

என்னை

-

என்னை

பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில்

-

இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும் முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப்பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்,

நீர்

-

நீங்கள்

என்னை

-

என்னை

ஆணையால்

-

ஸத்யமாக

காக்க வேண்டில்

-

காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்

என்னை

-

என்னை

ஆய்ப்பாடிக்கே

-

திருவாய்ப்பாடியிலே

உய்க்திடுமின்

-

கொண்டு சேர்த்துவிடுங்கள்

மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில்

-

(மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால்

தலை மறியும்

-

(இந்த நோயானது) தலை மடங்கும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெண்ணே! நீ ஆயிரந்தான் சொல்லு, உன்னுடைய துணிவு உகக்கத்தக்கதாகமாட்டாது. நீ படிதாண்டாப் பத்தினியாயிருக்க வேண்டியவள், படி கடந்து நீ செல்லுமளவில் அவ்வெம்பெருமானுக்கு அது பெருத்த அவத்யமாய் முடியும். ப்ரபந்நஸந்தானத்திலே இப்படியுமொருத்தி கிளம்பினாளே‘ என்று ஊராரும் பழிக்கநேரிடும், இதெல்லாம் உனது பெண்மை நிறைவுக்குப் பாங்கல்ல, உன்ஸ்வரூபத்தை நீ காத்துக்கொள்ள வேண்டாவா?“ என்று தாய்மார் சொல்ல, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள் - நான் முறை கெட்டபடியை இனிமேலா ஊரார் அறியப்போகிறார்கள்? என்றைக்கோ அறிந்த விட்டார்கள்!  இனிமேல் அறியவேண்டும்படி இங்கு ஒன்றும் ரஹஸ்யமாயிருக்கவில்லை, ஏழூர்ப்புல்லையும் மேய்த்து எட்டூர்த் தண்ணீரையுங் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றதன்றோ எனது நிலை, இனி நாம் ஆர்க்கு லஜ்ஜைப்பட வேணும், லஜ்ஜைப்பட்டுத்தான் பெறவேண்டியது என்ன இருக்கிறது.

இங்ஙனே கூறின ஆண்டாளை நோக்கிப் பின்னையும் அவர்கள் “நீ இப்படித் துணிச்சலாகச் சொல்லிவிட்டாலும் உன்னை நாங்கள் இவ்வளவிலே விட்டுப்போவோமா? உனக்கு நன்மை தேடுகை எங்கள் காரியமன்றோ? யானை தன்தலையில் தான்மண்னை வாரியிட்டுக்கொண்டாலும் பாகன் அதனை ஸோதிக்கக் கடவானன்றோ? அப்படியே நீயும் அறியாமையாலே உன் தலைக்குத் தீங்குவிளைத்துக் கொண்டாலும் அத்தீங்கைத் துடைத்து நன்மைபெறுத்த வேண்டியது எமது கடமையாதலால் உன் துணிச்சலை நாங்கள் நிறைவேறவொட்டுவோமோ? என்றார்கள், அவர்களை நோக்கிக் கூறுகின்றாள், “அன்னைமீர் எனக்கு நன்மை விளைக்கவேணுமென்ற விருப்பம் உங்களுக்கு உண்மையாக உண்டாகில், இப்போதே என்னைத் திருவாய்ப்பாயிலே கொண்டு சேர்க்கப்பாருங்கள், இதுவே எனக்குற்ற நன்மையாம், மற்றைப்படி நீங்கள் செய்யுமதெல்லாம் எனக்குத் தீமையேகிடீர்! என்கிறாள். “என்னை மெய்யே நோக்கப்பார்க்கிறிகோளாகில் தன்னுடையமைபெறுகைக்காகத் தன்னை இரப்பாளனாக்கினவனை என் கண்ணுக்கு இலக்காகப் பாருங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கத் தக்கது.

பாணியாது - காலதாமஸம் செய்யாமல் என்றபடி, பாணித்தல் என்னும் பதத்தை ஆழ்வார்களுள் பெரியாழ்வாரும் இவளுமே பிரியோகித்தனர். “பாணிக்கவேண்டா நடமின்“ என்றாரிறே பெரியாழ்வார்திருமொழியில்.

பண்டுபண்டாக்க - “பண்டாக்க“ என்றால் போராதோ? “பண்டுகண்டாக்க“ என்றதற்குக் கருத்தென்? எனில், கேண்மின். இப்போதைய என் அவஸ்த்தைக்கு முற்பட்டதான யாதொரு அவஸ்த்தையுண்டோ, அதற்கும் முற்பட்டதான் யாதொரு அவஸ்தையுண்டோ அல்வவஸ்தையில் நான் எப்படி யிருந்தேனோ அப்படி என்னை இப்போது ஆக்கவிரும்புவீர்களாகில் என்றபடி இதனை விவரிப்போம். - இப்போதைய அவஸ்தையாவது விரஹாவஸ்தை, இதற்கு முந்திய அவஸ்தையாவது ஸம்ஸலேஷா வஸ்தை, அதற்கும் முந்திய அவஸ்தையாவது - பகவத்விஷயவாஸனையே தியாமல்அந்யபரமாகப் போது போக்கினகாலம். உண்டியே உடையே உகந்திருந்த காலம். அப்போது ஸரீரம வாடாமல் வதங்காமல் மாமைகுன்றாமல் பசுகுபசுகென்றிருக்குமிறே, நிர்விசாரமாக உண்டுடுத்துத் திரயுங்காலத்திலே மேனி நித்யபுஷ்டமாயிருக்கும். பகவத் விஷயத்தில் வாஸனை பண்ணிப்போந்தது முதலாக “ஸம்யோகா விப்ரயோ காந்தா“ என்றபடி க்ஷணகாலம் ஸம்ஸ்லேஷமும் சிரகாலவிஸ்லேஷமுமாய் வ்யஸநமே மீதூர்ந்து செல்லுகையாலே - இப்போதைய விரஹாவஸ்தைக்கு முந்தியதான ஸம்ஸ்லேஷா வஸ்தையிலுள்ள நிறத்தை விரும்புவதில் ரஸமில்லையென்று, அதற்கும் முந்தியதான அந்யபரத்வாவஸ்தையிலிருந்த நிறத்தை விரும்புகிறாளாய்த்து இவ்வளவு அர்த்தங்களையும் இரண்டு வாக்கியத்திலே அடக்கி அருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளை, ஸம்ஸ்லேஷிப்பதற்கு முன்புத்தைப்பூர்த்தி எனக்குண்டாகப் பார்த்திகோளாகில், -கலக்கப்புக்கவன்று தொடங்கி மெலிவுக்கேயிறே க்ருஷிபண்ணிற்று“ என்று - என்னிறம் பண்டு பண்டுபோலொக்கும்“ (பெரியதிருமொழி கக.க.கூ) என்ற விடத்தில் வியாக்கி அறப்பண்டுபோலேயாம், கலக்கையாகிறது பிரிவுக்கு அங்குரமிறே, கலந்து பிரிந்து லாபாலாபங்களறியாதே பூர்ணையாயிருந்தபோதை நிறம்போலேயாம்“ என்பது அவ்விடத்து அருளிச்செயல்.

தலைமறியும் என்ற வினைமுற்றுக்கும் எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும், உலகளந்தமாயனை ஸேவிக்கப்பெற்றால் என்னுடைய ஆற்றாமை தலைமடங்கு மென்கை.

English Translation

No use fighting shy, now all the folks have come to know. If at all you wish to do me good, --I swear, --if at all you want to see me alive, take me now to Ayppadi. If I see the beautiful bachelor who took the Earth, I may live.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain