nalaeram_logo.jpg
(617)

மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை

பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி

மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்

பதவுரை

மற்று இருந்தீர்கட்கு

-

(என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு

அறியல் ஆகா

-

அறிய முடியாததாய்

மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை

-

மாதவன் விஷயமான அபிநிவேசத்தை

உற்றிருந்தேனுக்கு

-

அடைந்திருக்கிற எனக்கு

உரைப்பது எல்லாம்

-

நீங்கள் சொல்லுவதெல்லாம்

ஊமையரோடு செவிடர் வார்த்தை

-

ஊமையும் செவிடனுங் கூடிவார்த்தை சொல்லிக்கொள்வது போல் வீண் (இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)

புறத்து

-

ஸமீபப்தேசத்திலே

என்னை

-

என்னை

பெற்றிருந்தாளை ஒழியபோய்

-

மெய்நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து

பேர்த்து ஒருதாய் இல்

-

வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே

வளர்ந்த

-

வளர்ந்தவனும்

மல்பொருந்தாமல் களம் அடைந்த

-

மல்லயுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே தான் முற்பாடனாய்ப்போய்ச் சேர்த்திருப்பவனுமான

நம்பி

-

கண்ணபிரானுடைய (நகரமாகிய)

மதுரை

-

மதராபுரியினுடைய

உய்த்திடுமின்

-

கொண்டு சேர்ந்துவிடுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை இப்போதே பெறவேணுமென்று வருந்திக்கிடக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் அன்னையரும் ‘அம்மா! நம் தலையால் ஆவதொன்றுமில்லை, பேறு அவன் தலையாலே ஆகவேணும் என்பது ஸித்தாந்தமான பின்பு நீ இப்படிப்பதறுவதில் பயனொன்றுமில்லையே, அடைவிலேபேறு பெறலரகுமென்று ஆறியிருப்பதன்றோ முறைமை, அஸோக வநிகையிற் பிராட்டியின் அத்யவஸாயம் உனக்குத் தெரியாததன்றோ, அவளைப்போலே நீயும் ஆறியிருக்கவேணுங்காண், நீ இப்படிப் பதறலாகாது‘ என்றாற்போலே சிலஹிதவசநங்களைச் சொல்லப்புக, அவர்களைக்குறித்துக் கூறுகின்றாள் - ‘எனக்கு இப்போது நிகழ்கிற அவஸ்தை இப்படிப்பட்டதென்று சிறிதும் அறிபகில்லாத நீங்கள், பகவத்விஷய காமத்தின் மேலெல்லையிலே நிற்கிற எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என்காதில் புகவும்மாட்டா, புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி வுறுமளவிலே நான் நிற்கின்றிலேன், ஆகையாலே நீங்கள் எனக்குஹிதஞ் சொல்லப்பார்ப்பதை நிறுத்திவிட்டு * ஒருத்திமகனாப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்து சாணுர முஷ்டிகாதிமல்லர்களோடே போர்புரிந்து, வெற்றி பெற்ற கண்ணபிரானெழுந்தருளி யிருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள்‘ என்கிறாள்.

ஊமையரோடு செவிடர்வார்த்தை - செவிடரோடு ஊமையர் வார்த்தை சொல்லுமாபோலேராநின்றதென்றபடி ஊமை வார்த்தை சொல்வதற்கு அநர்ஹன், செவிடன் வார்த்தைகேட்பதற்கு அநரஹன், அதுபோல நீங்கள் என்னைப்பற்றிப் பேசுவதற்கு யோக்யதையற்றவர்கள், மர்யாதைமீறி நீங்கள் பேசினாலும் அப்பேச்சைக் கொள்வதற்கு எனக்குச செவியில்துளையில்லை, ஆகையாலே நீங்கள் எனக்கு சொல்லதெல்லாம் வீண் என்றவாறு.

‘இப்படி நீ வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லலாமா? நான் உன்னைப்பெற்ற தாய் அல்லேனோ? என்னைக் கைவிடப்பார்க்கலாமோ? என்று தாய்சொல்ல, ‘அம்மா! நான் என்செய்வேன்? பெற்ற தாயை உதறித்தள்ளிவிட்டு வேறிடந்தேடியோடுமவன் எனக்குத் தன்னோடு ஸாம்யாபத்தி கொடுத்தான்காண்‘ என்பாள்போலக் கூறுகின்றாள் மூன்றாபடி. கண்ணபிரான் வஸுதேவ பத்நியான தேவகிக்குப் பிள்ளையாகப்பிறந்து நந்தகோப பத்நியான யசோதையின் மகனாக வளர்ந்தருளினவரலாறு அறியத்தக்கது.

மற்பொருந்தா மற்களமடைந்தநம்பி - ‘தன்னுடம்போடே அணையவேணு மென்னுமாசையுடைய நானிருக்க, இத்தனைபோது புறப்பட்டு முரட்டுமல்லரோடே அணைகைக்குப் போகாநிற்கும். மல்லரானவர்கள் மற்பொருகைக்கு யுத்தபூமியிலே சென்று கிட்டுங்காட்டில் தான் யுத்தபூமியிலே சென்று கிட்டுமாய்த்து. அவன் மல்லருடம்போடே அணைவதற்குமுன்னே இடையிலே நான் சென்றுகிட்டிக்கொள்ளும்படி என்னை மதுரையின் பரிஸரத்திலே கொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் யோக்யதை அநுபவிக்கத் தக்கது.

மற்களமடைந்த வரலாறு. - கம்ஸனால் வலிய அழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில் அவர்களை எதிர்த்துப் பொருது சொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர்வந்து எதிர்த்து உக்ரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ்வீரர் இருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லவதஞசெய்த கதை.

“மதுரையின் பரிஸரத்திலே“ என்று வியாக்கியானத்தி அருளிச்செய்யப்பட்டிருத்தலால் “மதுரைப்புறத்து“ என்றபாடமே ஏற்கும். “புரத்து“ என்னக்கூடாது. இடையினரசுமல்ல, வல்லினறகரம்.

உய்த்திடுதல் - கொண்டு சேர்க்கையும். உஜ்ஸீவிக்கச்செய்கையும்.

English Translation

Your advices to me on my affair with Madavan are like words spoken by the mute to the deaf. Leaving his parents, did he not grow up in another household? Take me then to Mathura, where he wrestled in an unfair match.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain