(614)

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

 

பதவுரை

பண்டு ஒருநாள்

-

முன்னொருகாலத்தில்

பாசி தூர்த்து கிடந்த

-

பாசிபடர்ந்து கிடந்த

பார் மகட்டு

-

ஸ்ரீபூமிப்பிராட்டிக்காக

மாசு உடம்பில் நீர்வாராமானம் இலாபன்றிஆம்

-

அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகாநிற்கும் ஹேயமான தொருவராஹவடிவு கொண்ட

தேசு உடைய தேவர்

-

தேஜஸ்ஸையுடையகடவுளாகிய

திரு அரங்கம் செல்வனார்

-

ஸ்ரீரங்கநாதன்

பேசி இருப்பனகள்

-

(முன்பு)சொல்லியிருக்கும் பேச்சுக்களானவை

பேர்க்கவும் பேரா

-

(நெஞ்சில்நின்றும்) பேர்க்கப்பார்த்தாலும் பேரமாட்டாதவை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீதேவிக்காகப்பட்ட பாட்டைச் சொன்னாள் கீழ்ப்பாட்டில், பூமிப் பிராட்டிக்காகப் பட்டபாட்டைச் சொல்லுகிறாள் இப்பாட்டில்.

ஹிரண்யக்சிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னும் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்றபோது, தேவர் முனிவர் முதலியேரது வேண்டுகோளினால் திருமால் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹாவராஹரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டுபொருது கோட்டினாற்குத்திக்கொன்று, பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது. இப்பொழுது நடக்கிற ஸ்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத். மகல்பத்தைப்பற்றிய பிரளத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு.

பூமிப்பிராட்டியானவள் வெகுகாலம் ஜலத்துக்குள்ளே முழுகிக்கிடந்தபடியால் பாசிபடர்நது கிடந்தமைபற்றிப் “பாசிதூர்த்துக்கிடந்த“ என்று பூமிப்பிராட்டிபக்கலிலே அமர்ந்த ஆசையினால் ஒருஸரீரத்தைப் பரிக்ரஹித்தவன், அழுக்குடம்பினரான நாமெல்லாருங்கூட அருவருக்கும்படியாய் அத்யந்தஹேயமான பன்றிவடிவத்தையோ பரிக்ரஹிக்கவேணும்? ‘உடம்பு அழுக்கேறிற்று‘ என்று லஜ்ஜிக்கவுமறியாத ஜன்மத்தையன்றோ ஏறிட்டுக்கொண்டது நீர்வாருதல் - நீர்பெருகுதல் மானமிலா என்றவிடத்து வியாக்கியானம். “மாயாமருகத்தைக் கண்டு அல்லாதம்ருகங்கள் மோந்துபார்த்து வெருவியோடினவிறே அப்படியன்றிக்கே ஸஜாதீயங்கள் மோந்துபார்த்து ‘நம்இனம்‘ என்று மருவும்படியாயாய்த்து, ஈஸ்வராபிமாநம் வாஸனையோடே போனபடி.“

பன்றியாந்தேசுடையதேவர் - அஸ்மாத்திகளுக்குப்போலே கர்மமடியாக நேர்ந்த ஜன்மமன்றே, ஸ்வேச்சையாலே ஏறிட்டுக்கொண்ட ஜன்மமாகையாலே தேஜஸ்ஸு பொலியநிற்குமென்கிறது. “நிலைவரம்பில பலபிறப்பாய் ஒளிவருமுழுநலம்“ என்ற திருவாய்மொழியையுங் காண்க.

ஆண்டாள் தன்னுடையப்ர பணரோஷத்தின்மிகுதியினால் “மானமிலாப் பன்றி“ என்னச் செய்தேயும், ஆஸுரப்ரக்ருதிகளாய்ப் பழிக்குமவர்கட்கு இடமறும்படி தேசுடையதேவர் என்று உடனே சொல்லிவைக்கிறாள்.

(பேசியிருப்பனகள் இத்யாதி) ஸ்ரீவராஹநாயனார் பேசியிருக்கும்பேச்சுக் களாவன - “***“ (ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரேஸதி யோநர -தாது ஸாம்யேஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம், ததஸ்தம் ம்ரியமாணம்து காஷ்ட பாஷாணஸந்நிபம், அஹம ஸ்மராமி மத்பக்தம்நயாமிபரமாம் கதிம்.) என்றவை வராஹசரமச்லோகமிறே இவை. ஸரீரம் மனம்முதலியவை பாங்காயிருக்கும்போது என்னை ஒருவன் ஸமரிப்பானாகில் பின்பு அவன் மூச்சடங்கி முடியுமளவானபோது அவனை நான் ஸ்மரித்திருந்து நற்கதியை நண்ணுவிப்பேன் - என்றிறே சொல்லிவைத்திருக்கிறார். அப்பேச்சுக்கள் தன்னளவில் பலிக்கக் காணாமையாலே வருத்தம்.

பேசியிருப்பனகள் என்றவிடத்திற்கு வியாக்கியானத்தில் அருளிச்செய்யும் பொருள் வேறாபும் சீரியதாயுமிருக்கும்.

(செல்வனார்பேசியிருப்பனகள்.) ‘செல்வர் சொல்லுக்கஞசாரே‘ விபூதி விஷயமாகவும் ஆச்ரிதர் விஷயமாகவும் சொல்லியிருக்குமவை ணெணுதல், அன்றிக்கே, நின்னைப்பிரியேன், பிரியிலுமாற்றேன்‘ என்றாற்போலே கூடியிருந்தபோது சொன்னவையென்னுதல் (போர்க்கவும் பேராவே) இவற்றைமறந்து பிழைக்க வென்றுபார்த்தால் எண்ணாதே தம்முடைய நன்மைகளேயெண்ணி அவர் நம்மைமறந்தாலும் ‘கொடியவென்னெஞ்சமவனென்றே) கிடக்கும், என்னும்படியே நம்மால் மறந்துபிழைக்கப்போகிறதில்லை யென்கிறாள்.“ என்பது வியாக்கியானஸூக்தி.

தேசு - தேஜஸ் என்றவடசொற்சிதைவு.

 

English Translation

The Lord of Arangam is respectable and affluent. But long ago he came as a shameless unwashed dirty swine, and lifted dame Earth from the mossy deluge-waters. Who can tell the things that he spoke to her then?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain