(612)

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே

 

பதவுரை

காவிரி நீர்

-

காவேரியினி தீர்த்தமானது

செய்புரளஓடும்

-

பயிர்நிலங்களிலெலாம் ஓடிப்புரளும்படியான நீர்வளம்மிகுந்த

திரு அரங்களம்

-

திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற

செல்வனார்

-

ஸ்ரீமானாயும்,

எம்பொருட்கும் நின்று

-

எல்லாப்பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று

ஆர்க்கும் எய்தாது

-

ஒருவர்க்கும் கைப்படாமல்

நால்மறையின் சொல்பொருள் ஆய்நின்றார்

-

நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவரூமான பெரியபெருமான்

முன்னமே

-

ஏற்கனவே

கைப்பொருள்கள்

-

கையிலுள்ள பொருள்களையெல்லாம்

கைக்கொண்டார்

-

கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)

என் மெய் பொருளும்

-

எனது சரீரமாகிற வஸ்துவையும்

கொண்டார்

-

கொள்ளைகொண்டார்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியா யிருந்துகொண்டு ஒருவர்க்கும். கைப்படாமல் வேதவேத்யராயிருக்கும் பெரியபெருமாள் என்கையிலுள்ள பொருள்களை முன்னமே கைக்கொண்டார், கடைசியாக ஸரீரமென்கிற ஒருவஸ்து மிகுந்திருந்தது, அதையும் கொள்ளைகொண்டாரென்கிறாள்.

“கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூத்தி பரமபோக்யமானது - “இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்த்திறே பகவத்ஸம்பந்தம், * ஸ்ருஷ்ட ஸ்த்வம் வநவாஸாப போலே பிறக்கிறபோதே வளையிழந்து கொண்டுபோலே காணும் பிறந்தது.“

காவிரிநீர்செயப்புரளவோடும் திருவரங்கம் - அசேதநமான தீர்த்தமுங்கூட ரக்ஷ்யவாக்கம் வாடாமல் நோக்கும் தேஸம் என்றபடி. அசேதநமர்ன வஸ்துக்களும் தங்கள் தங்கள் ரக்ஷ்யவர்க்கங்களை நோக்குமிடமான திருவரங்கத்திலே வாழப்பெற்ற பரமசேதநன் ரக்ஷ்யகோடியிலே ஒருத்தியான என்னை நோக்காதிருப்பது தகுதியன்று என்று குறிப்பித்தபடி.

எப்பொருட்கும் நின்று - வேடுவிச்சி, குரங்கு, தயிர்க்கான் முதலிய ஸாமாநயமான பிராணிகட்கும் ஸுலபனாய் நிற்கச் செய்தேயும், ஆர்க்கும் எய்தாது - எவ்வளவு ஜஞாநாதிகராயிருந்தாலும் ஸ்வயத்நத்தாலே கிட்ட நினைப்பார்க்குக் கிட்டக்கூடாதவனாய் என்றும் பொருள் கொள்ளலாம்.

மெய்பொருளும் கொண்டார் - மெய் என்று ஆத்மாவையும் சொல்ல கடவதாகையாலே, ஆத்மீயங்களை ஏற்கனவே கொள்ளைகொண்டவர் இப்போது ஆத்மாவையும் கொள்ளைகொண்டார் என்பதாகவும் உரைக்கலாம்.

 

English Translation

The wealthy Lord of Arangam watered by the Kaveri, is the substance of the Vedas, present in all, evading all. He already took from me all I had. Now he is taking my soul as well.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain