(611)

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

 

பதவுரை

பொல்லா குறள் உரு ஆய்

-

விலக்ஷணவாமநருபியாய்

பொன்கையில்

-

அழகிய கையாலே

நீர் ஏற்று

-

பிக்ஷைபெற்று

எல்லா உலகும்

-

ஸகல்லோகங்களையும்

அளந்து கொண்ட

-

தன்வசப்படுத்திக்கொண்ட

எம்பெருமான்

-

ஸ்வாமியாய்

நல்லார்கள் வாழும்

-

நன்மைமிக்க மஹான்கள் வாழ்கிற

நளிர் அரங்கம்

-

ஸர்வதாபஹரமான திருவரங்கத்தில்

நாக அணையான்

-

திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையரான பெரியபெருமாள்

இல்லாதோம்

-

அகிஞ்சநையான என்னுடைய

கைப்பொருளும்

-

கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)

எய்துவான் ஒத்து உளன்

-

கொள்ளைகொள்வான் போலிராநின்றான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விலக்ஷணமான வாமநரூபத்தைப் பரிக்ரஹித்து அழகிய கையிலே நீரேற்றுப் பிச்சைவாங்கி, பிச்சையிட்டவன் குடிவாழ்வதற்கும் ஒரடிமண் மிகாதபடி கைலலோகங்களையும் அளந்து ஸ்வாதீதப்படுத்திக்கொண்ட மஹாநுபாவராய், ஸிஷ்டர்கள் வாழ்கிற திருவரங்கத்திலே அநந்தஸாயியாய் எழுந்தருளியிருக்கிற பெரியவர் தரித்ர்ரான நம்முடைய கைப்பொருளையும் (அதாவது - இந்தவுடம்பையும்) கொள்ளை கொள்வார்போலே இராநின்றார் என்கிறாள்.

பொல்லாக்குறள் - ‘நல்லகுள்ளுருவாய்‘ என்னவேண்டியிருக்க, ‘பொல்லாக்குறளுருவாய்‘ என்றது என்னென்னில், நல்லதென்றால் கண்ணெச்சில் படுமென்று நினைத்து, நல்ல வஸ்துக்கள்மேலே கரிபூசுவாரைப்போலே பொல்லாக்குறள் என்கிறாளென்பர். அன்றியே, அழகிய குறளுருவாய் என்றால் நாட்டிலுள்ள அழகோடு ஸமமாக நினைக்கக்கூடுமென்று விஜாதீயத்வம் தோற்றப் பொல்லாக்குறள் என்கிறாளென்றும் கூறுவர்.

நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றவிடத்து, “மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிந்தை யளித்திருப்பார், சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கமென்பதுவே“ என்ற பெரியாழ்வார் திருமொழி நினைக்கத்தக்கது.

இல்லாதோம் - ‘இல்லாதார்‘ என்பதன் தன்மைப்பன்மை. அந்த நாகணையில் ஏற பாக்யமில்லாத என்னுடைய, -மஹாபலியைப் போலேதம் அபேக்ஷிதம் பூர்ணமாகக் கொடுக்கஸக்தியில்லாத வென்னுடைய, - அவரைத் தவிர வேறொரு துணையில்லாத வென்னுடைய - என்றிப்படி மூன்றுவிதமாகப் பொருள் அருளிச்செய்வர். அகிஞ்சநையாயிருக்கிற என்னுடைய என்றபடி. கைப்பொருளாவது இங்கேஸரீரம் மிகுந்திருப்பது ஸரீரமேயிறே.

நளிரரங்கம் என்றவிடத்தில், திவ்யதேஸத்தின், போக்யதையிலே ஈடுபட்டு இரண்டு ஐதிஹங்களருளிச் செய்வர் - “பட்டர் முதுகில் புண்ணலே நொந்திருக்கச்செய்தே பெருமாள் அருள்பாடிட்டு “வராய்! அஞ்சினாயோ? இங்கேயிருக்கச் செய்தேயும் பரமபதம் என்சிறுமுறிப்படி செல்லும்படி பண்ணியருளிற்று, அதிலொரு குறையுமில்லை. இங்கே குளிர்ந்த முகத்தையும் திருநாமத் தழும்பையும் முறுவலையும் இழக்கவென்றால் அடியேன் அஞ்சமாட்டேனோ“ என்றாராம்.

ஆளவந்தார்மகனார் சொட்டைநம்பி ஓரளவிலே திருக்கோட்டியூர் நம்பியை நெகிழ ஒருவார்த்தை சொன்னாய் ‘நீ கடக்க வர்த்தி‘ (என்கண்வட்டத்தில்) நில்லாத தூரஸ்த்தனாய் ஒழிந்துபோ) என்று ஆளவந்தார் அருளிச்செய்ய, அவருடம் படைவீட்டிலே ராஜஸேவை பண்ணித் திரிந்தாய், பின்பு இவருடைய சரமஸமயத்திலே இவருடைய நீ நினைத்துக்கிடக்கிறதென்?’ என்று கேட்டார்களாய், ‘ஆளவந்தார் ஸ்ரீபாதத்தின் ஸம்பந்தம் பரமபத ப்ராப்தி பண்ணித் தந்தல்லது விடாது, அங்கேபோனால் ஸ்ரீவைகுண்டநாதன் முகம் நம்பெருமாள் திருமுகமண்டலம் போலே குளிர்ந்திருந்த்தில்லைபாகில் முறிச்சுக்கொண்டு வருவதாக நினைத்திருந்தேன்‘ என்றாராம். இவ்விரண்டு ஐதிஹயங்களும் நளிர் என்ற விஸேஷணத்தினால் ஏற்படுகிற போக்யதாப்ரகர்ஷத்தை விளக்குவன.

 

English Translation

The Lord took water from Bali’s palms; in one stride, he took the Earth as well. Living amid good people in Arangam, he plans to plunder us poor folk now.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain