nalaeram_logo.jpg
(589)

கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்

உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்

திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி

வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.

பதவுரை

ஒண்

-

அழகிய

கருவிளை மலர்காள்

-

காக்கணம் பூக்களே!

காயாமலர்காள்

-

காயாம் பூக்களே! (நீங்கள்)

திருமால்

-

எம்பெருமானுடைய

உரு ஒளி

-

திருமேனியின் நிறத்தை

காட்டுகின்றீர்

-

நீனைப்பூட்டாநின்றீர்கள்

எனக்கு

-

(அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு

உய் வழக்கு ஒன்று

-

பிழைக்கும் வகையொன்றை

உரையீர்

-

சொல்லுங்கள்

திரு விளையாடு

-

பெரியபிராட்டியார் விளையாடுமிடமான

திண் தோள்

-

திண்ணிய திருத்தோளை யுடையரான

திருமாலிருஞ் சோலை நம்பி

-

அழகர்

இல் புகுந்து

-

(எனது) வீட்டினுள் புகுந்து

வரி வளை

-

(எனது) அழகிய வளைகளை

வந்தி பற்றுமு வழக்கு உளதே

-

பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மழைகாலத்தில், கருவிளைப்பூக்களென்கிற காக்கணம் பூக்களும் காயாம் பூக்களும் விசேஷமாகப் புஷ்பிக்குமாதலாலும், அவை எம்பெருமானுடைய திருமேனிநிறத்தோடொத்த நிறத்தையுடையனவாயிருக்கு மாதலாலும் அவற்றின்காட்சி தனக்கு விரஹதசையில் உத்தீபகமாயிருப்பது பற்றி உண்டாகும் வருத்தத்தை அம்மலர்களை விளித்தே உரைக்கின்றாள். எம்பெருமானுடைய திருநிறத்தை நினைப்பூட்டா நின்று கருவிளைப்பூக்களை! காயாம்பூக்களே! நீங்கள் என்னை முடிக்கும்வகை ஒன்றுமோதான் கற்றது? நான் பிழைக்கும்வகையை அறிவீர்களாகிற் சொல்லுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

இங்ஙனம் யாசிக்கப்பட்ட அம்மலர்கள் ஆண்டாளைநோக்கி, ‘நாங்கள் உமக்கு ஜீவநோபாயம்சொல்லவேண்டும்படி இப்போது உமக்குநேர்ந்த அநர்த்தம் என்ன?‘ என்று கேட்டனவாகக் கொண்டு, அவ்வநர்த்தத்தை முறையிடுகின்றான் பின்னடிகளில்; திருமாலிருஞ் சோலையில் அவாப்தஸமஸ்தகாமரா யெழுந்தருளியிருக்கிற பெரியவர், நானொருத்தி இருப்பதாகவும் நினையாமல் தமது திருத்தோளைப் பெரியபிராட்டியார்க்கு நித்யாநுபவயோக்யமாகக் கொடுத்து அவளும் தாமும் பரமரஸபுஞ்ஜமாய் அநுபவம் நடத்தா நிற்பதைப்பற்றி நான் ஒன்றும் விசாரப்படாமல், ‘அவர் முன்புவிரும்பிப்போந்த வளைகள் நம்கையில் இருக்கின்றனவே. அவற்றைக் கண்டுகொண்டாவது தரித்திருப்போம்‘ என்றெண்ணி நான் என்வீட்டுக்குள்ளே கதவடைத்துக்கொண்டு கிடந்தால், அப்பெரியவர் அதனையும் பொறாமல் சடக்கென ஓடிவந்து என் வீட்டினுள் புகுந்து பலாத்காரமாக அவ்வளைகளைப் பறித்துக் கொண்டு ஓடினரே, இஃது எந்த நீதியிற்சேரும்?  இதற்குமேற்பட எனக்கு வேறோர் அநர்த்தம் விளையவேண்டுமோ என்கிறாள்.

காட்டுகின்றீர் - வினைமுற்றாகக்கொள்ளாமல் ஸம்போதநமாகக் கொள்ளுதலுமாம். உரையீர் - சொல்லுங்கள் என்றபடியுமாம், சொல்லமாட்டீர்களோ என்றபடியுமாம். உய்வழக்கு உரைத்தலாவது - அம்மலர்கள் தங்களை வெளிகாட்டிக்கொள்ளாமல் அடங்கிப்போதலாம். “நீ அஞ்சாதேகோள், நாங்கள் மறையநின்றோம்; என்று ஒரு வார்த்தை சொன்னாலாகாதே? பூப்போலே வந்து புலியானினோளீ!“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது.

திருமாலிருஞ்சோலை நம்பி இல்புகுந்து வரிவளைகளை வந்திபற்றினதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்; எம்பெருமான் தானாகவே வந்து ஸம்ஸ்லேஷித்துத் தானாகவே பிரிந்துபோனான் என்கை. விந்திபற்றுகை பிறர் இசையாதிருக்க நிர்ப்பந்தப்படுத்திப் பிடுங்கிக்கொள்ளுதல்

English Translation

O Beautiful Karuvilai flowers! O Kaya flowers! Your dark hues torment me with memories of the Lord; Show me a way out! The Lord of Malirumsolai has beautiful arms that sport with Sri. He broke into my house and snatched my bangles, is this fair?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain