nalaeram_logo.jpg
(568)

கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்

திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப

டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

பதவுரை

நல் சங்கே

-

அழகியசங்கே!

கடலில்

-

ஸமுத்திரத்திலே

பிறந்து

-

பிறந்து (அங்குநின்றும்)

பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து

-

பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற்போய் வளர்ந்து,

கருதாது

-

(இப்படி பிறந்தவிடத்தையும் வளர்ந்தவிடத்தையும்) நினையாமல்

ஊழியான்

-

எம்பெருமானுடைய

கை தலம் திடரில்

-

கைத்தமாகிற உந்நதஸ்தானத்திலே

குடி ஏறி

-

குடிபுகுந்து

தீய அசுரர்

-

கொடியவர்களான அசுரர்கள்

நடலே பட

-

துன்பப்படும்படி

முழங்கும் தோற்றத்தாய்

-

ஒலிசெய்யும்படியான மேன்மை யுடையை யாயிராநின்றாய். (உன்பெருமையே பெருமை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சங்கே! நீ பிறந்ததெங்கே? போய்வளர்ந்ததெங்கே?, உப்புக்கடலிலேபிறந்து அசுரனுடைய உடலுக்குள்ளே போய்வளர்ந்தாய், இப்படி மட்டமான குலத்திலே பிறந்து வளர்ந்தவுனக்கு எம்பெருமானுடைய திருக்கைத்தலத்திலே நித்யவாஸம்பண்ணப்பெறுதலும், அவனுடைய திருவாயிலேயிருந்துகொண்டு அஸுரராக்ஷஸாதிகள் குடல்குழம்பும்படி கோஷம் செய்யப்பெறுதலும் வாய்ந்தது என்ன பாக்கியம்!, உன் வைலக்ஷண்யத்தை என் சொல்வேன்? என்கிறாள்.

கருதாது என்ற எதிர்மறை வினையெச்சம், குடியேறி என்றதில் அந்வயித்து, பிறந்தவிடத்தையும் வளர்ந்தவிடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து எப்போதும் எம்பெருமானது திருக்கைத் தலத்திலேயே குடிவாழ்ந்து என்று பொருள் தரும். இனி, “கருதாது பஞ்சசன னுடலில் வளர்ந்து“ என உள்ளபடியே அந்வயித்தலுமாம். பஞசசன்னுடைய அஸுரத்தன்மையை (எம்பெருமானிடத்துப் பகைமைபூண்டவன் என்னுமிடத்தை) ப்பாராமல் அவனது உடலில் வளர்ந்து என்றபடி. ஊழியான் - என்றும் அழிவின்றி நெடுங்காலம் வாழ்பவன், யுகம்முடிந்த காலத்தும் தான்நின்று அனைவரையும் நோக்குமவன், காலத்துக்கு நிர்வாஹன் - எனப் பலபொருள்களுண்டு, எம்பெருமானுக்கு வாசகம். “கைத்தலத்திடர்“ - திடர் - உயர்ந்தஸ்தானம். நடலைப்படுதல் - துன்பமடைதலும் நடுக்கமடைதலும், “ஸகோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநிவ்யதாரயத்“ என்ற கீதை இங்கு நினைக்கத்தக்கது தோற்றம் - மேன்மை.

“முழங்குந்தோற்றத்தவனான நற்சங்கே! மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விரும்புற்றுக் கேட்கிறேன் சொல்“ என்று கீழ்ப்பாட்டோடே கூட்டி அந்வயித்தலுமாம்.

ஓரிடத்திற் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து ஓரிடத்திற் குடியேறினதாகச் சொல்லப்பட்டுள்ள இவ்விடத்தில் கண்ணபிரானுடைய நிலைமை நினைவுக்கு வரும். சங்கு கடலிற் பிறந்ததுபோல அவன் யதுகுலத்துப் பிறந்தான், சங்கு அரசனுடைய உடலில் வளர்ந்ததுபோல அவன் அசுரத்தன்மை பூண்டவனான் கம்ஸனுக்குள்ளாய் இறையிறுத்திருக்கிற திருவாய்பாடியிலே வளர்ந்தான், சங்கு கைத்தலத்திடரிற் குடியேறியதுபோல அவன் காலயவநஜராஸ்ந்தாதி களுக்காப்போய் ஸ்ரீவத்வாரகையைப் படைவீடாகச் செய்து அங்கே குடியேறினான். சங்கு தீயவசுரரை நடலைப்படுத்துவதுபோல அவன் துர்யோதனாதிகளை மண்ணுண்ணும்படி செய்தான். இப்படிகளாலே திருச்சங்கானது எம்பெருமானோடு பரமஸரம்யம் பெற்றிருக்கின்றதென்பதும் ஆண்டாளது கொண்டாட்டத்தில் உள்ளுரை.

English Translation

Good for you, O Conch! Though you are born of the lowly ocean and brought up in Panchajana’s filthy body, you have risen high. Held in the Lord’s left hand, you strike fear among the wicked Asuras with your booming sound.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain