nalaeram_logo.jpg
(558)

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

-

இந்திரன் முதலான தேவஸமூஹங்களெல்லாம்

வந்து இருந்து

-

(இந்திலத்திலே) வந்திருந்து

என்னை மகள் பேசி

-

என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தைசொல்லி

மந்திரித்து

-

அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர்செய்து கொள்ளவேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு, (பிறகு)

அந்தரி

-

‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்

மாந்திரம் கோடி உடுத்தி

-

கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி

மணம் மாலை சூட்ட

-

பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்திரன் முதலிய வானவர்களெல்லாரும் ‘நம்முடைய பெருமானுக்கு நடக்கப்போகிற கல்யாணம் ஹோக்ஸவத்தை நாமெல்லாருமாய்க் கூடியிருந்து காரியங்கள் செய்து நிறைவேற்றிவரவேணும்; என்று குதூஹலித்துத் தலையிலேகால் பாவிவந்து ‘இக்காரியம் முடிந்தாலன்றி நாங்கள் எழுந்திருப்பதில்லை‘ என்று பிடிவாதமாயிரந்து ‘எங்களபெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாக்கித் தரவேணும்‘ என்று பெரியதிரளிலே பிரார்த்தித்து, பிறகு உபவர்க்கத்தாரும் ரஹஸ்யமாகவிருந்து பூஷணபீதாம்பரங்கள் விஷயமாகவும் மற்றுமுள்ள ஸம்விதாநங்கள் விஷயமாகவும் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளவேண்டியவற்றைக்காதோடு காதாகப்பேசி முடித்து, இனிக் காலவிளம்பம் செய்தால் ஏதாவது இடையூறு நேரிடக்கூடுமென்றெண்ணி அப்போதே, மணமகளுக்கு நாத்தனாரைக்கொண்டு புடவையுடுத்திகிறக்ரமத்திலே எனக்கு நாத்தனாரான துர்க்கையைக்கொண்டு புடவையுடுத்தி நன்மாலைகளையும் சூட்டுவித்து இப்படிப்பட்ட சில பாணிக்ரஹணபூர்வாங்கங்கள் நடைபெறக் கனாக்கண்டேனென்கிறாள்.

சக்ரவர்த்தி திருமகன் பண்டு வனவாஸகாலத்தில் சரபங்கபகவானுடைய ஆச்ரமத்திற்று எழுந்தருளினபோது அங்கு தேவேந்திரன் வந்திருந்தும் பெருமாளை ஸேவியாமலே தன்னுலகம் நோக்கிச்சென்றான், பெருமாள் தம்முடைய பரத்வத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் “ஆத்மாநம்மந்யே“ என்று ஸரமாந்யமான மானிடத்தன்மையையே ஏறிட்டுக்கொண்டிருந்தபடியால் இப்போது இவரைக்காணவேண்டா, ராவணஸம்ஹாரம் தலைக்கட்டினபின்பு ஸேவித்துக்கொள்வோம் என்று போய்விட்டான், கிருஷ்ணாவதாரம் அப்படியல்லாமல் ஈசவரத்வமுங் வுடவேகலந்து பரிமாறு மவதாரமாகையாலே இந்திரன் முதலியோர் வந்து குறுக்கும் நெடுக்கும் குலாவித்திருந்து அதிகப்ராஜாபத்யம் பண்ணுவர்களாம்.

மகள்பேசுதல் - ‘இவளை மணமகளாகத் தாரைவார்த்துக்கொடுக்கவேணும்‘ என வேண்டிப் பேசுதல் மந்திரித்து - (மந்தர்) என்றவடசொல்லடியாகப்பிறந்த அவ்யயம். மந்த்ரமாவது ஆலோசனை, ஆலோசித்து என்றபடி. மகள்பேசினபிறகு ஆலோசிப்பது பூஷ்ணபீதாம்பராதி விஷயமென்க. மந்திரக்கோடி - (மந்த்ரவாஸஸ்) என்பர் வடநூலார். “கோடியுடுத்து“ என்று சிலர் ஒதுவர். “உடுத்தி“ என்றபாடமே ஏற்கும்: ‘உடுத்து‘ என்றால், தான் அணிந்துகொண்டு என்று பொருள், உடுத்தி என்றால் பிறர்க்குச் சாத்தி என்றுபொருள், இங்குப் பிறவினைப்பொருள் படவேண்டிநிற்றலால் ‘உடுத்தி‘ என்றபாடமே ஏற்குமென்ப.

அந்தரி - ‘துர்க்கைக்குப் பெயர், இவள் கண்ணாபிரானுக்கு உடன்பிறந்தாளாதலால் ஆண்டாளுக்கு நாத்தனாரானாள். அந்தரத்திலே (ஆகாயத்திலே) அந்தரத்தாநமாய்ப் போனமையால் அவளுக்கு அந்தரி என்று பேராயிற்றென்க.

English Translation

I had a dream O sister! Indra and the hordes of celestials came. They approved the match and chanted Mantras. Andari his sister draped me with the bridal Saree and garland.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain