nalaeram_logo.jpg
(530)

நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்

ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே

ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்

போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே

பதவுரை

ஊழி எல்லாம்

-

கற்பாந்த காலத்திலெல்லாம்

உணர்வானே

-

(ஜகத்ரக்ஷணசிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!

நீரிலே நின்று அயர்க்கின்றோம்

-

ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்’

நீதி அல்லாதன  அநீதியான செயல்களை

ஆல்

-

ஐயோ!’

(இப்படி நீ எங்களை வருத்தத்செய்தேயும்)

உனக்கே

-

உன்விஷயத்திலேயே

ஆர்வம் உடையோம்

-

நாங்கள் அன்புள்ளவர்களாயிரா நின்றோம்’

அம்மனைமார்

எங்கள் தாய்மார்

காணில்

-

நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்

செய்தாய்

-

செய்யாநின்றாய்’

(உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்)

ஊர்

-

எங்கள் ஊராகிய ஆய்ப்பாடியும்

அகம்

-

மாளிகைகளும்

சாலவும்

-

மிகவும்

சேய்த்து

-

தூரத்திலிராநின்றன:

ஒட்டார்

-

இசையமாட்டார்கள்’

எங்கள் பட்டை

-

எங்களுடையசேலைகளை

போரவிடாய்

-

தந்தருளாய்,

பூ குருந்து

-

பூத்திராநின்ற குருத்த மரத்தின் மேல்

ஏறி இராதே

-

ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! கோழி கூவுதற்கு முன்னே, நீ உணர்ந்து வருவதற்கு முன்னே பிடித்து வந்து நாங்கள் நீரிலே தோய்ந்து அத்தாலே அறிவுகலங்கிப் படுகிற க்லேசங்களைப் பாராய் என்று ஆய்ச்சிகள் கூறியதைக் கேட்ட கண்ணபிரான் ‘நீங்கள் நீரிலே நின்று வருந்துவதற்கு மேலாக நான் நெடும் போதாக மரத்திலே நின்று பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் இரையாகிப் படுகிற க்லேசத்தைக் கண்டீர்களில்லையோ? உங்களாலேயன்றோ எனக்கு இக்கஷ்டம் நேர்ந்தது’ என்று சேலைகளையுங் கொடாதே சில விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ண, ‘அப்பா! இப்படியும் எம்மை நீ அநியாயஞ் செய்வாயோ?’ என்று ஆய்ச்சியர் முறையிட, ‘நான் செய்வது அநியாயமாகில் நீங்கள் ஊரிலேபோய் முறையிட்டுக் கொள்ளுங்கள்’ என்று கண்ணன் கூற, நாயனே! ஊரும் மாளிகைகளும் கிட்டவிருந்தனவாகில் அது செய்யலாமாயிருந்தது, நாங்கள் உன்னால் கண்டுபிடிக்க வொண்ணாதபடி வரவேணுமென்று, நெடுந்தூரம் வந்தோமே ‘என்செய்வோம்’ என்று ஆய்ச்சிகள் அலமர’ அதுகண்ட கண்ணன் ‘பெண்காள்! நானோ மிறுக்குப் பண்ணாநின்றேன், ஊரோ தூரமாயிராநின்றது’ இனி நீங்கள் போக்கடியாக நினைத்திருப்பதென்?’ என்று வினவ, “ஊழியெல்லா முணர்வானே!” என்கிறார்கள். ஜகத்துக்களை யடங்க ப்ரளயம் வந்து விழுங்கியவன்று எல்லாப் பொருள்கட்கும் போக்கடியைச் சிந்தித்து ஜாகரூகனாயிருந்த நின்னையன்றி வேறுயாரைப் போக்கடியாக நினைக்கவல்லோ மென்கை. (??????  - ஸதேவ) என்னும்படியான வன்று (????)  என்று போக்கடி பார்க்கவல்ல நீ பார்க்குமித்தனையன்றோ” என்ற வியாக்கியாநஸூக்தி அறிக.

இங்ஙனம் தன்னையே போக்கடியாக நினைத்துப் பேசின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான் - ‘நான் ப்ரளயங்கதமான ஜகத்துக்குப் போக்கடி பார்ப்பது உண்மையே, அந்த ஜகத்துக்களுக்கு அப்ரதிஷேதம்- (விலக்காமை) என்கிற பெருத்த குணமொன்று இருந்தபடியாலே நான் அது செய்யலாய்த்து’ உங்கள் திறத்து அஃது இல்லையே’ என்ன’ ‘பிரானே! அப்ரதிஷேதத்துக்கும் மேற்பட ஆநுகூல்யமு முடையவர்களா யிராநின்றோமே நாங்கள், எம்மை நீ இப்படி பேசலாமோ!’ என்று பெண்கள் சொல்ல’ அதுகேட்ட கண்ணபிரான், ‘நீங்கள் “ஆர்வமுனக்கே யுடையோம்” என்று வாயாலே, சொன்னால் அதை நம்புவாருண்டோ? அது கார்ய பார்யவஸாயியாக வேண்டாவோ, ஆர்வத்தைச் சற்று வெளிக்காட்டுங்கள் பார்ப்போம், என்று சில அங்க ஸம்ஜ்ஞைகளைப் பண்ண, ஆய்ச்சிகள் ‘அப்பனே! அப்பேச்சு தவிர்க’ - இதையெல்லாம் எங்கள் தாய்மார்  காண்பரேல் தடிபிணக்கே’ இப்போது இவ்வளவிலே அருள்புரிந்து எங்கள் பட்டைப் பணித்தருளாய்’ என்கிறார்கள்.

(போரவிடாய்) சேலையை எங்கள் கைக்கு எட்டிற்று எட்டாதாக விட வொண்ணாது, முழுச் சேலையும் எங்கள் கையில் வந்து விழும்படி விட்டருளாய் என்கை.  .... ....  ....   ....  (எ)

English Translation

We stand in the water and suffer. What you do is not fair, alas! O lord who knows the universe, our homes are far away. We are fond of you alone. Our mothers will not permit this. Do not remain sitting on the blossoming Kurundu. Hand us our clothes.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain