nalaeram_logo.jpg
(526)

எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்

பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி

வில்லாலி லங்கை யழித்தாய்நீ வேண்டிய தெல்லாம் தருவோம்

பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே

பதவுரை

வில்லால்

-

வில்லாலே

இலங்கை

-

லங்கையை

அழித்தாய்

-

நாசஞ் செய்தருளினவனே!

எல்லே

-

என்னே!

ஈது என்ன இளமை

-

இது என்ன பிள்ளைத்தனம்!

எம் அனைமார்

-

எங்களுடைய தாய்மார்கள்

காணில்

-

கண்டால்

ஒட்டார்

-

(மறுபடியும் எங்களை வீட்டின் வழிவர) ஒட்டார்கள்’

(நீயொவென்றால்)

ஈது

-

கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது

பொல்லாங்கு என்று

-

பொல்லாத காரியமென்று

கருதாய்

-

நினைக்கிறாயில்லை’

பூ குருந்து

-

புஷ்பித்திராநின்ற குருந்த மரத்தின் மேல்

ஏறி இருத்தி

-

ஏறியிராநின்றாய்’

நீ வேண்டியது எல்லாம்

-

நீ அபேஷிக்குமவற்றை யடங்கலும்

தருவோம்

-

கொடுக்கிறோம்’

பல்லாரும்

-

(ஊரிலுள்ள) பலரும்

காணோமே

-

காணாதபடி

போவோம்

-

போகிறோம்’

பட்டை

-

(எங்களுடைய) பட்டுச் சேலைகளை

பணித்தருளாய்

-

தந்தருளவேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆய்ச்சிகள் நெடுங்காலம் நீரிலே நின்று வருந்தச் செய்தேயும் கண்ணபிரான் அவர்கள் சேலைகளைக் குருத்த மரக்கிளையிலேயே இட்டுவைக்க, ‘கரங்கள் நீரிலே கெடும்போதாக நின்று வருந்த, நீ பேசாதிருக்கிறதென்’ சேலைகளைத் தா’ என்று இவர்கள் கேட்க’ ‘நீரை விட்டுக் கரைமேல் ஏறுங்கள், சேலைகளைத் தருகிறேன்’ என்றான்’ அதுவும் மெய்தானென்று சிலர்நம்பிக் கரைமீது ஏறினார். ஏறினவர்களுடைய அங்கப்ரத்யங்களை உற்றுநோக்கிப் புன்முறுவல் செய்து சில விலாஸ சேஷ்டைகளைப் பண்ணினான்’ எல்லே! ஈதென்ன இளமை” என்றார்கள். ‘நான் இளைஞனும்படி நீங்கள் தாம் முலைபெருத்த முதுமையரோ? வயஸ்ஸில் பார்த்தால் என்னோடு உங்களோடு ஒரு வாசி இல்லை’ இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமானபின்பு பருவத்துக் கீடாகப் பாரிமாற நீங்கள் உடன்பட வேண்டாவோ?’ என்றான்’ “எம்மனைமார் காணில் ஒட்டார்” என்கிறார்கள். நாங்கள் உடன்படாமையில்லை, எங்கள் சுற்றத்தார் கண்டால் சீறுவார் என்ற அச்சத்தினால் மறுக்காநின்றோ மென்கை.

அது கேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! அழகாகச் சொன்னீர்கள்’ உங்களுக்கு மாத்திரந்தானோ சுற்றத்தாருள்ளது? எனக்கும் ஒரு தாயும் தகப்பனம் உறவு முறையாருமில்லையா! நான் ஏதேனும் காம்பற்று வானத்தினின்றும் விண்டு விழுந்தேனோ? சுற்றத்தார் பலரும் இருக்கவன்றோ நானும் இங்ஙனே பேசுகிறது’ உங்களுக்கு மாத்திரம் வந்த அச்சமென்?’ என்ன’ அது கேட்ட ஆய்ச்சிகள், ‘உன்னைப் போலேயோ நாங்கள், எங்களைப் போலேயோ நீ? நாங்கள் பழிக்கு அஞ்சுவோம், நீ பழியென்றால் உடம்பு பெருக்கிறாயன்றோ’ என்கிறார்கள்-“பொல்லாங் கீதென்று கருதாய்.”

‘நான் அஞ்சேனாகிலும் உங்களுக்கு இவை தரவேண்டியதில்லையே’ என்று குருந்தின்மேலே பூப்பொருந்தினாற் போலே பொருந்தி, கீழ்இறங்கக் கருத்தின்றியே இருந்தான்’ “பூங்குருந்தேறியிருத்தி’ என்கிறார்கள்.

(வில்லால் இத்யாதி) ப்ரஹ்மாதிதேவர்களுடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாதபடி வரபலத்தாலே சேமிக்கப்பட்டிருந்த இலங்கையை, ஒரு பிராட்டிக்காக நாசஞ்செய்தருளின நீ இன்று எம்மை இங்ஙன் வருத்துவது என்னோ? என்றவாறு, ஸாபிப்ராயஸம்போதநம்.

இதுகேட்ட கண்ணபிரான், ‘ஆம், நான் பிராட்டிக்காக அங்ஙனே அளவற்ற பாடுகள் பட்டதுண்டு, என் நினைவுக்கு அவள் ஒத்திருந்தபடியாலே அவளுக்காகக் காரியஞ்செய்தேன்’ அப்படியே நீங்களும் என் நினைவுக் கீடாக வந்தாலன்றோ நான் உங்கள் காரியஞ்செய்வது’ என்றான்’ “அதிலும் ஒரு குறையுமில்லை’ நீ அபேக்ஷிக்குமதெல்லாம் செய்யக்கமவோம்” என்கிறார்கள்-“நீ வேண்டியதெல்லாம் தருவோம்.”

‘அப்படியாகில் ஸம்போக பிக்ஷைகொடுங்கள்’ என்று மடியை ஏற்றான்’ ‘இந்த பிக்ஷை  ஸதஸ்யமாகக் கொடுக்கக் கூடியதோ?  ரஹஸ்யமன்றோ? ஒருவருங் காணாதவிடம் தேடிப்போவோமென்கிறார்கள் - ‘பல்லாரும் காணோமே போவோம்.”

‘ஆகில் புறப்படுங்கள் போகலாம்’ என்றான்’ அரையில் சேலையின்றிப் புறப்பட மாட்டாமையாலே “பட்டைபட பணித்தருளாய்” என்கிறார்கள்.

English Translation

Come now, what childishness is this, sitting on the Kurundu tree? Our mothers will not approve of it; do you not consider it bad? O Sire who destroyed Lanka with a bow, we will give you all you ask for and go home unseen. Pray hand us our clothes.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain