nalaeram_logo.jpg
(513)

கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற

மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று

பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே

பதவுரை

கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை

-

கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய

கழல் இணை பணிந்து

-

இரண்டு பாதங்களையும் வணங்கி

அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று

-

கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும் பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், நீலமணி போன்ற நிறத்தானுமான  கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று

பொருப்பு அன்ன மலை போன்ற

மாடம்

-

மாடங்கள்

பொலிந்து தோன்றும்

-

மிகவும் விளங்காநிற்கப் பெற்ற

புதுவையர் -

-

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு

கோன்

-

ஸ்வாமியான

விட்டுசித்தன்

-

பொரியாழ்வாருடைய (மகளாகிற-)

கோதை

-

ஆண்டாள் (அருளிச்செய்த)

விருப்புடை

-

விருப்பமடியாகப் பிறந்த

இன்தமிழ் மாலை

-

இனிய தமிழ்மாலை யாகிய இப்பாசுரங்களை

வல்லார்

-

ஓதவல்லவர்கள்

விண்ணவர்கோன்

-

நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய

அடி

-

திருவடிகளை

நண்ணுவர்

-

கிட்டப்பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார் பெறும் பேறு கூறுமிப்பாசுரம் திருநாமப்பாட்டென்றும் பலச்ருதியென்றும் வழங்கப்பெறும்.

கரியலற மருப்பினை யோசித்த வரலாறு :- வில்விழா என்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுமளவில், அவ்வரண்மனை வாசல்வழியில் தம்மைக் கொல்லும் பொருட்டு அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயா பீடமென்னும் மத யானை சீறிவர அவ்யாதவவீரர்; அதனை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பது போல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்வானையை உயிர் தொலைத்து விட்டு உள்ளே போயினரென்பதாம். புள்வாய் பிளந்த வரலாற்றை, கீழ் இரண்டாம் பாட்டினுரையிற் காண்க.

விட்டுசித்தன் ஸ்ரீ “வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே,- கோயில் கொண்ட கோவலன்” என்றபடி பெரியாழ்வார் எம்பெருமானுக்குத் தம் திருவுள்ளத்தையே கோயிலாக அமைத்தருளினமையால் விஷ்ணுசித்தரெனக் காரணப் பெயர் பெற்றனரென்க. “விருப்புடன்” என்ற பாடத்தில், ‘விருப்புடன் வல்லார்’ என இயையும்.

வியாக்கியானம் :- “(விண்ணவர் இத்யாதி.) ஸாத்விகாக்ரேஸரரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்துவைத்து பகவல் லாபத்துக்காக மடலெடுப்பாரோ பாதி காமன் காலிலே விழவேண்டும்படியான இவளைப் போலன்றிக்கே இப்ரபந்தங் கற்றவர்கள் ஸம்ஸாரத்தை விட்டு, நித்யாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகளோடே ஒரு கோவையாய் அநுபவிக்கப் பெறுவர்கள்.” .

English Translation

O Lord in mortal form deserving a thousand names! Were you to become our master’s son-in-law, would that relieve our pains? We were waiting for the god of love, for this is spring time. Naughty Sire! Do not come and break our sand castles.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain