(512)

தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்

பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்

அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய் உழுவதோ

ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே

 

பதவுரை

முப்போதும்

-

(இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்

தொழுது வணங்கி

-

ப்ரணாமபூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து

உன் அடி

-

உன்பாதங்களில்

துதூ மலர்தூய்

-

பாரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி

தொழுது

 

ஸேவித்து-

ஏத்துகின்றேன் நான்

-

ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்

பார் கடல் வண்ணனுக்கே பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே

பழுது இன்றி

-

குற்றமொன்றுமில்லாமல்

பணிசெய்து

-

கைங்கரியம் பண்ணி

வாழப் பெறாவிடில்

-

உஜ்ஜீவியா தொழிவேனாகில்

அழுது அழுது

-

(பின்பு நான்) பலகாலும் அழுது

அலமந்து

-

தடுமாறி

அம்மா வழங்க

-

‘அம்மா!’ என்று கதறிக் கொண்டுதிரிய

அது

-

அப்படி என்னைத் துடிக்கவிடுவது

ஆற்றவும்

-

மிகவும்

உனக்கு உறைக்கும்

-

உன்தலைமேல் ஏறும்’ (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது

உழுவது ஓர் எருத்தினை

-

ஏருழுகின்ற ஒரு எருதை

நுகம் கொடு பாய்ந்து

-

நுகத்தடியால் தள்ளி

ஊட்டம் இன்றி தீனியில்லாமல்

துரந்தால் ஒக்கும்

-

ஒட்டிவிடுவதைப் போலாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸாத்விகராயிப்பார் பகவதாராதநம் பண்ணித்தலைக் கட்டினபிறகு திருவடிகளிலே விழுந்து ‘நான் தொடங்கின திருவாராதநத்தைத் தலைக்கட்டினேன், திருவுள்ளத்திற்குப் பாங்கானபடியே போது போக்கியருளவேணும்’ என்று ஸ்தோத்ர ரூபமானவற்றை விண்ணப்பஞ் செய்வது போல், இவள் மன்மதனிடத்திற் சில விண்ணப்பஞ் செய்கிறாள். “தூரிமலர்தூவி” என்ற பாடம் மறுக்கத் தக்கது. “ஏத்துகின்றேன்’ என்பதை, வினைமுற்றாகவும், வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம்.

(பழுதின்றி) பணிசெய்கையில் பழுதில்லாமையாவது - ஸ்வப்ரயோஜநத்வ புத்தி கலசாமல் கைங்கரியம் பண்ணுகை’ “மற்றைநங் காமங்கள் மாற்று” என்றது காண்க. “வழுவிலா அடிமை செய்யவேண்டும்” என்றார் ஆழ்வாரும்.

நான் இத்தனை காரியஞ்செய்து உன்னடி பணியச் செய்தேயும் நீ உபேக்ஷித்து என்னைக் கண்ணபிரானோடு கூட்டாதொழிவையாகில், நான் துக்கம் பொறுக்கமாட்டாமல் மிகவு மழுது அம்மா! என்று கதறித் திரியும்படி நேரிடும்’ அந்தப் பாதகம் உன்தலைமேலேறும் ஆதலால் நீ என்னை உபேக்ஷி தொழியவேனுமென்கை மூன்றாமடியின் கருத்து.

பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் (???????) ???????????? சரணாகதனை நோக்காவிட்டால் இவனுடைய பாபபலத்தை அவன் அநுபவித்து அவனுடைய ஸுக்ருதபலம் இவன் பக்கலிலே வருவதாகச் சொல்லாநின்றதிறே’ அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின் ஆச்ரயணத்துக்கு ஒருபலின்றிக்கே யொழியுமாகில் அது உனக்குப் பொல்லாதாங்கிடாய்.” என்பதாம்.

கடையடியின் கருத்து:-நான் உனக்கு இன்றளவுஞ் செய்த பணிவிடைகளை நீ ஏற்றுக்கொண்டு என் காரியத்தைச் செய்து முடிக்காமற் போவது - உழவன் தன் ஜீவநத்துக்காக எருதினிடத்தில் பூர்ணமாக வேலையை வாங்கிக் கொண்டு, பின்பு அதற்குத் தீனி இடாமல் நுகத்தடியால் அடித்துத் தள்ளி ஒட்டுவது போலாம். கொடு - கொண்டு என்பதன் சிதைவு.

 

English Translation

O God of Love! Thrice a day I strew fresh flowers at your feet. Like a plough bullock beaten with a staff and turned out without food or water, if I am denied the life of faultless service to Krishna, the Ocean hued Lord, I will weep and stumble, and cry “Mother!” which will hurt you sorely, so mind!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain