(510)

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்

தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்

சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

 

பதவுரை

மன்மதனே  மன்மதனே!

காய் உடை நெல்லோடு

-

பசுங்காய் நெல்லும்

கரும்பு

-

கரும்பும்

அமைத்து

-

சமைத்து

(அதனோடு கூட)

கட்டி

-

கருப்புக்கட்டியும்

அரிசி

-

பச்சரிசியும்

அவல்

-

அவலும்

(ஆகிய இவற்றையும்)

அமைத்து

-

சமைத்து

அளந்தவன் -

-

(திருவடிகளால்) அளந்தருளினவனும்

திருவிக்கிரமன்

-

திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்

என்னை

-

என்னுடைய

சாய் உடை

-

ஒளியையுடைய

வயிறும்

-

வயிற்றையும்

மென் தடம் முலையும்

-

மென்மையும் பருமையும் பொருந்தியமுலைகளையும்

வாய் உடை

-

நல்ல ஸ்வரத்தையுடையராயும்

மறையவர் -

-

காமசாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய

மந்திரத்தால்

-

மந்திரத்தினால்

உன்னை வணங்குகின்றேன்-’-

முன்

-

மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்

தேசம் ஸகல

-

லோகங்களையும்

திருகைகளால்

-

- (தனது) திருக்கையினால்

தீண்டும் வண்ணம்

-

ஸ்பர்சிக்கும்படி பண்ணி

தரணியில்

-

(இப்) பூமண்டலத்தில்-

தலைப் புகழ்

-

நிலைநின்ற கீர்த்தியை

தர கிற்றி

-

(நான்பெறும்படி) தந்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பால்மாறாத பசுங்காய் நெல்லும், கரும்பும், கருப்புக்கட்டியும், பச்சரிசியும், அவலுமாகிற இவை ரஜோகுண ப்ரசுரனான காமதேவனுக்கு ஆமவையென்க. “வாயுடைமறையவர் மந்திரத்தால்” என்றது - காமசாஸ்த்ரமாகிய வாத்ஸ்யாயநத்திற் கூறியமுறை வழுவாமல் என்றபடி.

தேசமுன்னளந்த வரலாறு:- மஹாபலி என்னும் அஸுரராஜன் தன் வல்லமையினால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்த பொழுது அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமுடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு அந்த மாவலியினடஞ்சென்று தன்காலடியால் மூவடி மண்வேண்டி அதுகொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து மூன்றும் அடிக்காக அவன் முடியிற் காலை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம். ஆண்டாள் இங்கு இவ்வபதாநத்தைக் கூறியது - ‘என்னைத் தீண்டவேணும்’ என்று ஒருவரும் விரும்பாதிருக்கத் தானே உலகங்களையெல்லாம் தீண்டியருளினவன் தீண்டு தீண்டென்று வைகலும் வாய்வெருவுகின்ற என்னைத் தீண்டவேணும்’ என்று ஒருவரும் விரும்பாதிருக்கத் தானே உலகங்களையெல்லாம் தீண்டியருளினவன் தீண்டு தீண்டென்று வைகலும் வாய்வெருவுகின்ற என்னைத் தீண்டினால் வரும் பாவமென்னோ? என்று வருந்துகின்றமையைக் காட்டுதற்கென்க. என்னை - உருபுமயக்கம். சாய்-ஹாயா என்கிற வடசொற்சிதைவு. முலைக்கு மென்மையாவது - காதலனுடைய பிரிவைக் கணப்பொழுதும் பொறுக்ககில்லாமை. தரணி-யரணீ;. தலைப்புகழ் - தலையான புகழ்’ சிறந்த புகழ் என்கை: ‘எம்பெருமானாலே தீண்டப்பெற்றவள் இவள்’ என்று அனைவராலுங் கொண்டாடப்பெறுகை. கிற்றி-கில் என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த முன்னிலை யொருமை வினைமுற்று. ....  ....  ...

 

English Translation

O God of Love! I have cooked this food of raw paddy, flaked seeds and rice, with the syrup of sugar and the juice of sugarcane; I offer it to you with chants. Grant that my Krishna, Lord who came as a bachelor and measured the Earth, Comes to touch my big breasts and bright torso with his beautiful hands.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain