(509)

உருவுடை யாரிளை யார்கள்நல்லார் ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்

தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்

 

பதவுரை

காமதேவா

-

மன்மதனே!

உருஉடையார்

-

அழகிய வடிவையுடையராயும்

இளையார்கள்

-

யௌவன பருவமுடையராயும்

நல்லார்

-

காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்

பங்குனி நாள்

-

பங்குனிமாதத்துப் பெரிய திருநாளில்

திருந்தவே நோற்கின்றேன்

-

நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்காநின் (றேன்’

கருஉடை முகில் வண்ணன்

-

(நீரைக்) கருவிலேயுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்

காயா வண்ணன்

-

காயாம்பூப் போன்ற திருநிறத்தை யுடையவனும்

ஒத்து வல்லார்களை கொண்டு

-

காமஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு

வைகல்

-

நாள்தோறும்

தெருவிடை

-

நீ வரும் வழியிலே

எதிர்கொண்டு

-

எதிரேசென்று

கருவிளை போல் வண்ணன்

-

காக்கணம் பூப்போல் பளபளப்பையுடையனுமான கண்ணபிரான்

கமலம் வண்ணம் திருஉடை முகத்தினில் திருகண்களால்

-

செந்தாமரை மலரின் நிறம் போன்ற காந்தியையுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்

எனக்கு

-

என் விஷயத்தில்

திருந்தவே நோக்க

-

விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி

அருள்

-

நீ கிருபை பண்ண வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை அடிபணிய வேண்டுவோர் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்  பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி வேதவித்துக்களான வைதிகரை முன்னிட்டுப் பணிவதுபோல், ராஜஸதேவதையான காமனைக் குறித்து நோன்பு நோற்கைக்கு ஆண்டாள் சில அதிகாரிகளை முன்னிட்டுக் கொண்டு இழியுமாறு  கூறுவன, முன்னடிகள். ஒத்து-ஓதப்படுவது  ப்ரகரணபலத்தினால் காமஸூத்ரமாகிற வேதத்தை இங்குக்கூறும்’ அதாவது - வாத்ஸ்யாயந சாஸ்த்ரம்

தெருவிடை எதிர்கொள்ளுகை - ஆதராதியத்தின் காரியம். திருந்தவே நோற்கின்றேன் என்றது-காமனைத் தொழுகை ஸ்வரூபநாசக மன்றோவென்று இறாய்க்காமல் நோற்கின்றேன் என்றவாறு.

கருவுடைமுகில் - நீர்கொண்டெழுந்த காளமேகம். நோக்கு + எனக்கு, நோக்கெனக்கு’ தொகுத்தல் விகாரம்.

 

English Translation

O God of Love! Every day I go out and perform the rites of spring, in the company of shapely, young, perfect and adept maidens. Grant that my Krishna, Lord of cloud hue, dark Keya flowers hue will set his bright and beautiful lotus eyes on me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain