(508)

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து  கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

 

பதவுரை

மன்மதனே!-

வானிடை

-

ஸ்வர்க்கலோகத்தில்

வாழும்

-

வாழுகின்ற

அவானவர்க்கு

-

விலக்ஷணரான தேவர்களுக்கென்று

மறையவர்

-

ப்ராஹ்மணர்

வேள்வியில்

-

யாகத்தில்

வகுத்த அலி

-

கொடுத்த ஹவிஸ்ஸை

கானிடை திரிவது ஓர் நரி புகுந்து

-

காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து

என்தடம் முலைகள்

-

எனது பருத்த முலைகளானவை

மானிடவர்க்கு என்று பேச்சு படில்

-

(அப்புருஷோத்தமனையொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)

கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப

-

கடந்தும் மோந்துபார்த்தும் கெடுப்பது போல

ஊனிடை  (தனது) திருமேனியில்

ஆழி சங்கு

-

திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)

உத்தமற்கு என்று

-

புருஷோத்தமனுக்காக

உன்னித்து எழுந்த

-

ஆதரவுடன் கிளர்ந்த யவை) என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமேயானால்

வாழகில்லேன்

-

உயிர்வாழ்ந்திருக்கமாட்டேன்’

(கண்டாய்

-

முன்னிலையசை.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்நிலவுலகில் அந்தணர்கள் அனுட்டிக்கும் யாகங்களில் என்று இந்திரன் முதலிய தேவர்கட்குவகுக்கும் புரோடாசத்தை, மிகவும் அற்பஜந்துவாகிய ஒரு காட்டுநரி கிட்டி அந்த ஹவிஸ்ஸைக் காலால் கடந்தும் மூக்கால் மோந்தும் நஷ்டமாக்குவது போல், கண்ணபிரானக்காகக் கிளர்ந்தெழுந்த என் கொங்கைகளை மானிடர்க்கு உரியனவாகப் பேசும் பேச்சொன்று இப்பூமண்டலத்தில் கிளம்புமேயாகில் எனது உயிர் உடனே மாய்ந்துவிடும், அப்பேச்சுத்தானே எனக்கு விஷமாகுமென்று காமனை நோக்கிக் கூறுகின்றாள். இதனால் மநுஷ்யனாய்ப் பிறந்த ஒரு பிள்ளைக்கு ஆண்டாளைத் தாரைவார்த்துத் தரலாமென்ற ஒரு பேச்சு ஒரு காபுருஷன் வாயில்வந்தாலும் அது தனக்கு அஸஹ்ய மெனக்கூறும் முகத்தால் ‘கண்ணபிரா னொருவனையே தான் பதியாகப் பெற விரும்புமாற்றைக் கூறியவாறு. ‘அங்கைத் தைலத் திடையாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று செங்கச்சுக் கொண்டு கண்ணாகிக் காணீர் கோவிந்தனுக்.. கல்லால் வாயில் போகா” என்று மேலும் கூறுவள். தேவர்களுக்கு இட்ட புரோடாசத்தை நரி கெடுக்குமாபோல - என்ற இவ்வுவமையினால் ‘இவளுடைய கொங்கை மானிடர்க்கு உரியன என்னும் பேச்சு உலகிலுண்டானால் பின்பு அம்முலைகள் எம்பெருமானுக்கு ஹேயமா மென்னுமிடம் தோற்றுவிக்கப்படும். அவி-ஹவிஸ் என்ற வடசொல் விகாரம்.

 

English Translation

O God of Love! These swollen breasts of mine are meant for Krishna, Lord of discus. Like a sneaky jackal from the forest toppling and sniffing the sacrificial Havis that Vedic seers had kept for the gods, if you marry me to a mortal, I shall not live, take note.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain